யுபிஎஸ்சி தேர்வு: தமிழகத்தில் 57 பேர் தேர்வு; சிவச்சந்திரன் முதலிடம்
கேகேஆர் பேட்டர்களிடம் நம்பிக்கை குறைவாக உள்ளது: டுவைன் பிராவோ
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டர்களிடம் நம்பிக்கை குறைவாக உள்ளதாக அந்த அணியின் ஆலோசகர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தியது.
இதையும் படிக்க: தமிழக வீரரிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்: ரஷித் கான்
நடப்பு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.
டுவைன் பிராவோ கூறுவதென்ன?
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டர்களிடம் நம்பிக்கை குறைவாக உள்ளதாக அந்த அணியின் ஆலோசகர் டுவைன் பிராவோ தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஐபிஎல் மிகவும் கடினமான தொடர். அணிக்கு சரியான தொடக்கம் கிடைக்கவில்லையென்றால், அந்த அணியில் உள்ள பேட்டர்கள் நம்பிக்கையை இழக்கும் நிலைக்கு ஆளாகுவார்கள். தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நடப்பதும் அதேதான். அதனால், நான் முன்பு கூறியதைத்தான் இப்போதும் கூறுகிறேன். எங்களது அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.