காஞ்சிபுரம்: யார் திவ்ய பிரபந்தம் பாடுவது? மீண்டும் வடகலை-தென்கலை பிரச்னை!
கேரளம்: யானை தாக்கியதில் கர்நாடக இளைஞர் பலி!
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் யானை தாக்கியதில் கர்நாடகாவைச் சேர்ந்த 22 வயது பழங்குடியின இளைஞர் பலியானார்.
கர்நாடக மாநிலம் குட்டா பகுதியைச் சேர்ந்த பழங்குடியின இளைஞரான விஷ்னு (வயது 22), கடந்த ஜன.7 அன்று இரவு 7.30 மணியளவில் கொல்லிவயல் பகுதியிலுள்ள பத்திரி வனப்பகுதியின் வழியாக கர்நாடக நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, தீடீரென அங்கு வந்த காட்டு யானை விஷ்னுவை தாக்கியுள்ளது. இதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் உடனடியாக அங்கு சென்று அவரை மீட்டு அவர்களது ஜீப்பில் அருகிலுள்ள மனந்தவாடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே விஷ்னு பரிதாபமாக பலியானார்.
இதையும் படிக்க:சரணடைந்த 6 நக்சல்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: கர்நாடக அரசு
இந்தச் சம்பவம் குறித்து கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே. சசீந்திரன் கூறுகையில், பலியானவரது குடும்பத்துக்கு தனது இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், அவர்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பத்திரி வனப்பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாகவுள்ளதினால் தொடர் ரோந்து பணிகளை அதிகரிக்கவும், பழங்குடியினர் மற்றும் குடியிருப்புவாசிகள் பயணிக்க பாதுகாப்பான வழியை உருவாக்கவும் வனத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.