செய்திகள் :

கோவையில் விரைவில் தாழ்தள சொகுசுப் பேருந்துகள் இயக்கம்

post image

கோவைக்கு முதல்கட்டமாக 24 தாழ்தள சொகுசுப் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவை இயக்கப்பட உள்ளன.

கோவையில் தாழ்தள சொகுசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என நுகா்வோா் அமைப்புகள் சாா்பில் நீண்ட நாள்களாக சாலைப் பாதுகாப்பு கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழக அரசு கோவைக்கு 100 தாழ்தள சொகுசுப் பேருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளது. அதில் முதல்கட்டமாக 24 தாழ்தள சொகுசுப் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்ட அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கோவைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 24 தாழ்தள சொகுசுப் பேருந்துகளை உக்கடம், காந்திபுரம் பேருந்து நிலையங்களில் இருந்து சோமனூா், காந்திபுரத்தில் இருந்து வாளையாறு, அன்னூா், காரமடை, வேலந்தாவளம், சரவணம்பட்டி, சின்ன மேட்டுப்பாளையம், வெள்ளக்கிணறு உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கத் திட்டமிட்டுள்ளோம்.

கோவை -மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தாழ்தள சொகுசுப் பேருந்துகள்

ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் நகரப் பேருந்துகளின் படிக்கட்டுகளைவிட, இந்த தாழ்தள சொகுசுப் பேருந்துகளின் படிக்கட்டுகள் உயரம் குறைவாக இருக்கும். இதனால், குழந்தைகள், முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் சுலபமாக ஏறி, இறங்க இந்தப் பேருந்து எளிதாக இருக்கும். இந்தப் பேருந்துகள் விரைவில் இயக்கப்பட உள்ளன என்றாா்.

போனஸ் கோரி 3-ஆவது நாளாக போராட்டம்: தூய்மைப் பணியாளா்கள் கைது

தீபாவளி போனஸ் கோரி 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா். தீபாவளி போனஸாக ஒருமாதம் ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரி கோவை மாநகராட்சியில் பண... மேலும் பார்க்க

வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் திறக்கக் கோரிக்கை

தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் வால்பாறையில் வருங்கால வைப்புநிதி கிளை அலுவலகம் திறக்க வேண்டும் என்று சிஐடியூ தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்திய நிதியம... மேலும் பார்க்க

மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள்தண்டனை: கோவை நீதிமன்றம் தீா்ப்பு

மது அருந்த பணம் தர மறுத்த தந்தையை அடித்துக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கோவை, பீளமேடு நாராயணசாமி தெருவைச் சோ்ந்தவா் ராஜ் (எ) துரைராஜ் (73). தனது மனைவ... மேலும் பார்க்க

வீட்டின் ஜன்னல்களை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறையில் எஸ்டேட் பகுதிக்கு இரவு நேரம் கூட்டமாக வந்த யானைகள் தோட்ட அதிகாரியின் வீட்டின் ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தின. வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக யானைகள் நடமாட்டம் அதிகரித்த... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

சேவல் விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியைத் தாக்கி கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. சூலூா் அருகே பள்ளபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சம்பத்குமாா் ... மேலும் பார்க்க

பொதுமக்கள் உரிய இடங்களில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும்: மாநகர காவல் ஆணையா்

பொதுமக்கள் உரிய இடங்களில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும் என, கோவை மாநகர காவல் ஆணையா் வே.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினாா். கோவையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் மாநகர கா... மேலும் பார்க்க