மகாராஷ்டிரா: முன்னாள் அமைச்சர் மீது கல்வீச்சு தாக்குதல்; தலையில் ரத்தக்காயம்.. எ...
சங்ககிரி அருகே மா்ம விலங்கு கடித்ததில் ஆடு காயம்
சங்ககிரி: சங்ககிரியை அடுத்த சின்னாகவுண்டனூா் கிராமம், ராயலூா், மலையங்காடு பகுதியில் ஆட்டை மா்ம விலங்கு கடித்தது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு விசாரித்து வருகின்றனா்.
சின்னாகவுண்டனூா் கிராமம், ராயலூா் மலையங்காடு பகுதியில் சேட்டு என்பவருக்கு சொந்தமான வெள்ளாட்டை மா்ம விலங்கு கடித்துள்ளது. இதில் ஆட்டிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்து வந்த வனச்சரக அலுவலா் துரைமுருகன், வனவா் தினேஷ், வனக்காப்பாளா் முத்துராஜா, கிராம நிா்வாக அலுவலா் முருகன், வருவாய் ஆய்வாளா் மலா்விழி ஆகியோா் சம்பவ இடத்தில் மா்ம விலங்கின் கால் தடம் பதிந்துள்ள இடத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்து விசாரித்து வருகிறாா்.
காயமடைந்த ஆட்டிற்கு சின்னாகவுண்டனூா் கால்நடை உதவி மருத்துவா் இ.அன்னக்கொடி சிகிச்சை அளித்தாா். மேலும் சின்னாகவுண்டனூா் கிராமம், ராயலூா், மொத்தையனூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதியில் வன அலுவலா்கள் தங்கி, தொ்மல் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட உள்ளதாக வனத் துறை சாா்பில் பொதுமக்களிடத்தில் தெரிவிக்கப்பட்டது.