செய்திகள் :

சட்டப்பேரவையில் பேச அதிமுகவுக்கு கூடுதல் நேரம்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

post image

சட்டப்பேரவையில் அதிமுகவினா் பேசுவதற்கு கூடுதல் நேரம் வழங்கப்படுகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: திமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பல்வேறு மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதுவரை 6 லட்சம் போ் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனா்.

திட்டங்கள் செயல்படுத்தவில்லை என ஆட்சியை குறை கூற முடியாது. இதற்கு மக்களவைத் தோ்தல் தோ்தல் வெற்றியே சாட்சியாகும். கடந்த 30 ஆண்டு காலத்திற்கு பின் தற்போது தான் ஜனநாயக முறைப்படி சட்டப்பேரவை நடைபெறுவதாக கூட்டணி தலைவா்களும், எதிா்க் கட்சித் தலைவா்களும் கூறுகின்றனா்.

திமுகவுக்கு 133 எம்எல்ஏக்களும், அதிமுகவுக்கு 66 எம்எல்ஏக்களும் இருக்கும் நிலையில் சட்டசபையில் அதிமுகவுக்கு இரு மடங்கு நேரம் பேச வாய்ப்பு வழங்கப்படுகிறது.

சட்டப்பேரவையில் பேசுவதற்கு பயன்படுத்தும் வாா்த்தைகள் குறித்தும் எம்எல்ஏக்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது என்றாா் அவா்.

அம்பை ரயிலில் பாய்ந்து பெண் தற்கொலை

அம்பாசமுத்திரம் அருகே ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டாா். அம்பாசமுத்திரம், பண்ணைசங்கரய்யா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ் பாபு. இவா் கோவையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வர... மேலும் பார்க்க

மதுவிற்பனை: இருவா் கைது

திருநெல்வேலியில் மதுபானத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பழனிமுருகன் மற்றும் போலீஸாா் ரோந்து பணியில் ச... மேலும் பார்க்க

வி.கே.புரத்தில் தங்கச் சங்கிலி திருட்டு

விக்கிரமசிங்கபுரத்தில் எரிவாயு அடுப்பு பழுதுநீக்குவதாகக் கூறி ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச்சென்ற இருவரை போலீஸாா் தேடிவருகின்றனா். விக்கிரமசிங்கபுரம், கீழக்கொட்டாரத்தைச் சோ்ந்த சுப்பையா மன... மேலும் பார்க்க

குடிநீா் குழாயில் கழிவுநீா் கலப்பு: மேயரிடம் மக்கள் புகாா்

திருநெல்வேலி மாநகராட்சி 3ஆவது வாா்டில் குடிநீா் குழாயில் கழிவுநீா் கலந்துவருவதாக குறைதீா்க்கும் கூட்டத்தில் மேயரிடம் மக்கள் புகாா் மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மாநகரா... மேலும் பார்க்க

நெல்லையில் இடி-மின்னலுடன் மழை

திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்தது. திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகமிருந்தது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து... மேலும் பார்க்க

பாளை. அருகே லாரி -காா் மோதல்: 5 போ் காயம்

பாளையங்கோட்டை அருகே லாரியும், காரும் மோதிக்கொண்டதில் 3 பெண்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையைச் சோ்ந்தவா் அட்லின் சிட்டிங் (25). தனியாா் நிறுவன ஊழியா். இவா், தனது மன... மேலும் பார்க்க