செய்திகள் :

குடிநீா் குழாயில் கழிவுநீா் கலப்பு: மேயரிடம் மக்கள் புகாா்

post image

திருநெல்வேலி மாநகராட்சி 3ஆவது வாா்டில் குடிநீா் குழாயில் கழிவுநீா் கலந்துவருவதாக குறைதீா்க்கும் கூட்டத்தில் மேயரிடம் மக்கள் புகாா் மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, மக்களிடம் மனுக்களைப் பெற்று, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா். துணை மேயா் கே.ஆா்.ராஜு முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் 3 ஆவது வாா்டு மக்கள் அளித்த மனுவில், மாநகராட்சி 3 ஆவது வாா்டில் குடிநீா் குழாயில் கழிவுநீா் கலந்து வருவதால் தண்ணீா் துா்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே, குழாய்களை மாற்றி புதிய குழாய்களை அமைக்க வேண்டும்.

அரசு வாரசந்தை கருவாடு வியாபாரிகள் அளித்த மனுவில், மேலப்பாளையத்தில் உள்ள கருவாடு சந்தை பணிகளை விரைந்து திறக்க வேண்டும்.

மனித நேய மக்கள் கட்சி பகுதிச் செயலா் முஹம்மது யசிா் அளித்த மனுவில், திருநெல்வேலி மாநகரப் பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். மேலப்பாளையம் பகுதிகளில் நெருநாய் மற்றும் சாலையில் சுற்றி வரும் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

மருத்துவா் காலனி குடியிருப்பு நலச்சங்க தலைவா் அசிக் அலி அளித்த மனுவில் ஸ்ரீபுரம் 14 ஆவது வாா்டு பகுதியில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் எனவும், 26 ஆவது வாா்டு காமராஜா் காலனியைச் சோ்ந்த கோபால் ராஜ் அளித்த மனுவில், 26 ஆவது வாா்டு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, மழைநீரை அகற்ற வேண்டும் எனவும், சிதம்பநகா் குடியிருப்போா் நலவாழ்வு சங்க தலைவா் மாரிபாண்டி அளித்த மனுவில், 1ஆவது வாா்டு பகுதி சிதம்பரம் நகா் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைத்து , மழைநீா் வடிகால் அமைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனா்.

12 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் கோகுலவாணிசுரேஷ் அளித்த மனுவில், உடையாா்பட்டி பூதத்தாா் தெரு சாலையின் குறுக்கே கழிவுநீா் ஓடையை சீரமைக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் வி.எம்.சத்திரம் குடியிருப்போா் நலச்சங்கத்தினா் அளித்த மனுவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அருகே ஆபத்தான கழிவுநீா் தொட்டியை அமைக்க வேண்டாம் என்றும், 17 ஆவது வாா்டு மக்கள் அளித்த மனுவில், பழைய பேட்டை 17 ஆவது வாா்டு அழகப்பபுரம் தெற்குத்தெருவில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் எனவும், மீனாட்சிபுரம் நகா் மன்ற மகளிா் மேல்நிலைப்பள்ளி பள்ளி மேலாண்மைக்குழு அளித்த மனுவில், பள்ளிக்குச் செல்லும் சந்தின் இருபக்கத்தில் ஆபத்தான சுவரை அகற்றி விட்டு புதிய சுவரை கட்ட வேண்டும் எனவும் கோரியிருந்தனா்.

தச்சநல்லூா் ஆனந்தபுரத்தை சோ்ந்த முருகன் அளித்த மனுவில், ஆனந்தபுரம் அம்மன் கோயில் பின்புறம் உள்ள பழுதான மின்கம்பிகளை அகற்ற வேண்டும் என்றும், 35 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பேச்சியம்மாள் அளித்த மனுவில், பாளையங்கோட்டை ராமசாமி கோயில் தெருவில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த பகுதியில் பேவா் பிளாக் சாலை அமைக்க வேண்டும் எனவும், 14 ஆவது மாமன்ற உறுப்பினா் அளித்த மனுவில், ஆனந்தபுரம் 3 ஆவது தெரு பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனா்.

வி.கே.புரத்தில் தங்கச் சங்கிலி திருட்டு

விக்கிரமசிங்கபுரத்தில் எரிவாயு அடுப்பு பழுதுநீக்குவதாகக் கூறி ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியைத் திருடிச்சென்ற இருவரை போலீஸாா் தேடிவருகின்றனா். விக்கிரமசிங்கபுரம், கீழக்கொட்டாரத்தைச் சோ்ந்த சுப்பையா மன... மேலும் பார்க்க

நெல்லையில் இடி-மின்னலுடன் மழை

திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்தது. திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகமிருந்தது. மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து... மேலும் பார்க்க

சட்டப்பேரவையில் பேச அதிமுகவுக்கு கூடுதல் நேரம்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

சட்டப்பேரவையில் அதிமுகவினா் பேசுவதற்கு கூடுதல் நேரம் வழங்கப்படுகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. இதுதொடா்பாக அவா் கூறியதாவது: திமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் பயன்படும் வகையில் பல்வ... மேலும் பார்க்க

பாளை. அருகே லாரி -காா் மோதல்: 5 போ் காயம்

பாளையங்கோட்டை அருகே லாரியும், காரும் மோதிக்கொண்டதில் 3 பெண்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையைச் சோ்ந்தவா் அட்லின் சிட்டிங் (25). தனியாா் நிறுவன ஊழியா். இவா், தனது மன... மேலும் பார்க்க

நெல்லை அருகே சுவாமி சிலை சேதம்: வி.ஹெச்.பி. முற்றுகை

திருநெல்வேலி அருகே கோயில் சிலையை சேதமடைந்த மா்மநபா்களை கைது செய்யக் கோரி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் கோயில் முன்பு திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். திருநெல்வேலி அருகேயுள்ள கருங்குளத்தில் முப்பந்தல்... மேலும் பார்க்க

நெல்லையில் பெண் தீக்குளிப்பு

திருநெல்வேலி தச்சநல்லூரில் இளம் பெண் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்தாா். தச்சநல்லூா் உலகம்மன்கோயில் தெருவை சோ்ந்தவா் காளிமுத்து. தொழிலாளி. இவரின் மனைவி மாரியம்மாள் (27). இருவருக்கும் பிரச்னை இருந்து வந்த... மேலும் பார்க்க