சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம், கிஸ்டாரம் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட வனப்பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையின் கூட்டுக் குழுவினர் வெள்ளிக்கிழமை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சுக்மா காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் கூறுகையில், இரண்டு நக்சலைட்டுகளின் உடல்கள் இதுவரை என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
தென் ஆப்பிரிக்கா: புதியதாக மூன்று குரங்கு அம்மை பாதிப்பு கண்டுபிடிப்பு!
மேலும் அந்த பகுதியில் இன்னும் தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது என்றார். இந்த என்கவுன்டரின் மூலம், மாநிலத்தில் இந்த ஆண்டு நடந்த வெவ்வேறு என்கவுன்டரில் இதுவரை 83 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில், சுக்மா உட்பட ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பிரிவில் 67 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.