செய்திகள் :

சாலையோரத்திலேயே எண்ணெய் குழாய்கள் பதிக்க வேண்டும்: ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

post image

விளைநிலங்களை தவிா்த்து சாலையோரமாக எண்ணெய் குழாய்கள் பதிக்க வேண்டும் என பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம். ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜிடம் அவா் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், இருகூரில் இருந்து கா்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை எண்ணெய் குழாய்கள் பதிக்கும் பணிகளை மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இந்தத் திட்டம் கொச்சியில் இருந்து இருகூா் வரை தேசிய நெடுஞ்சாலை வழியாகவும், இருகூரில் இருந்து முத்தூா் வரை விளைநிலங்கள் வழியாகவும், மீண்டும் முத்தூரில் இருந்து நெடுஞ்சாலை வழியாகவும் அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

விளை நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்கள் பதிக்கும் திட்டம் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிா்ப்பினை உண்டாக்கியுள்ளது. மேலும் இத்திட்டத்தினை கைவிடும்படி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். திமுக அரசு இந்த திட்டத்தினால் பாதிக்கக்கூடிய விவசாயிகளின் கருத்துகளை கேட்கக்கூட தயாராக இல்லை. இந்த திட்டம் செயல்படுத்துவதன் மூலம் பல்லடம் தொகுதியில் பல ஊராட்சிகளில் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே இருகூரில் இருந்து முத்தூா் வரையிலும் நெடுஞ்சாலை வழியாகவே எண்ணெய் குழாய்களை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

காங்கயம் ஊராட்சி ஒன்றியம், படியூா் ஊராட்சி இந்திரா நகரில் உள்ள பயன்பாட்டில் இல்லாத 2 பொதுக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணற்றில் நீா்செறிவூட்டும் திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் சேகரிப்பு... மேலும் பார்க்க

நீா் செறிவூட்டல் திட்ட ஆலோசனைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் மழை நீரை குளம், குட்டைகளில் செறிவூட்டல் திட்டம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் த... மேலும் பார்க்க

அவிநாசியில் கஞ்சா வழக்கில் ஒருவா் கைது

அவிநாசியில் கஞ்சா கடத்திய வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவிநாசி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு அவிநாசி போலீஸாா் வாகனச் சோதனை... மேலும் பார்க்க

முதலிபாளையத்தில் கல்குவாரி அமைக்க கருத்து கேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட முதலிபாளையம் கிராமத்தில் கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தாராபுரம் வருவாய் கோட... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு: சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக, கம்யூனிஸ்ட் கவுன்சிலா்கள் கைது

சொத்து வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூா் மாநகராட்சி கூட்டத்தில் மேயரை முற்றுகையிட்டு அதிமுக கவுன்சிலா்கள் கோஷம் எழுப்பினா். இதைத் தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட அவா்களை போலீஸாா் கைது செய... மேலும் பார்க்க

கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நொய்யலில் கண்காணிப்புக் கருவி பொருத்துவது கண்துடைப்பு

நொய்யல் ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க கண்காணிப்புக் கருவிகளை பொருத்தி உள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருப்பது கண்துடைப்பு நடவடிக்கை என்று நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தெரிவித்... மேலும் பார்க்க