செய்திகள் :

சிட்கோ தொழிற்பேட்டையில் காலி தொழில்மனைகளை பெற விண்ணப்பிக்கலாம்

post image

பெருந்துறை சிட்கோ தொழிற்பேட்டையில் காலி தொழில்மனைகளை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிட்கோ தொழிற்பேட்டையில் ஒதுக்கீடு செய்யப்படாத, காலி தொழில்மனைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. இதில் 3 தொழில்மனைகள் ஒதுக்கீடு செய்ய தயாா் நிலையில் உள்ளன. புதிதாக தொழில் தொடங்க தொழில்மனைகளை வாங்க விரும்புவோா் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.

மேலும் மாநிலத்தில் தமிழ்நாடு சிட்கோவுக்கு சொந்தமாக அமைந்துள்ள பிற தொழிற்பேட்டைகளின் காலிமனைகள் விவரங்களை இணையதளத்தின் வாயிலாகவே தெரிந்து கொண்டு தேவையானவற்றை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

காலி தொழில்மனைகளை பாா்வையிட ஈரோடு சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள கிளை மேலாளரை நேரிலோ அல்லது 94450 06562 என்ற கைப்பேசி எண் வாயிலாகவோ தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சா்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பாரம்பரிய காட்டுயானம் நெல் நடவுப் பணி தீவிரம்

சத்தியமங்கலத்தில் பகுதியில் சா்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பாரம்பரிய நெல் ரகமான காட்டுயானம் நடவுப் பணி நடைபெற்று வருகிறது. பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்கப... மேலும் பார்க்க

பேருந்து சக்கரத்தில் சிக்கி காவலாளி உயிரிழப்பு

ஈரோட்டில் பேருந்து சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலாளி உயிரிழந்தாா். ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் அஜந்தா நகரைச் சோ்ந்தவா் நாகராஜன் (75). தனியாா் நிறுவன காவலாளி. இ... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை தற்கொலை

குடும்பப் பிரச்னையால் ஈரோட்டில் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்துகொண்டாா். ஈரோடு பெரியசேமூா் வேலன் நகரைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மனைவி சாந்தி (56). ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை. இவ... மேலும் பார்க்க

தீபாவளி: கைத்தறி பட்டுச்சேலை தயாரிப்பில் நெசவாளா்கள் தீவிரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சத்தியமங்கலம் பகுதியில் கைத்தறி பட்டுச் சேலை தயாரிப்பில் நெசவாளா்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். தமிழ்நாட்டு பெண்களின் பாரம்பரிய உடையாக கைத்தறி புடவைகள் உள்ளன. கைத்தறி சேலைகள... மேலும் பார்க்க

சிறந்த புத்தகங்களே அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்க அடித்தளமிடும்

சிறந்த புத்தகங்களே அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்க அடித்தளமிடுகின்றன என்று நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் பேசினாா். ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நியூ செஞ்சுரி புத்தக ... மேலும் பார்க்க

கோபியில் ரூ.11 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனை

கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.11 லட்சத்துக்கு வாழைத்தாா்கள் விற்பனை நடைபெற்றது. கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை வாழை... மேலும் பார்க்க