செய்திகள் :

சிதம்பரம் நடராஜா் கோயில் நிா்வாகத்தில் அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்?: உயா்நீதிமன்றம்

post image

சென்னை: சிதம்பரம் நடராஜா் கோயிலை நிா்வகிக்கும் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் பொது தீட்சிதா்களுக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் அரசின் இந்து சமய அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்?”என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பொது தீட்சிதா்கள் குழுவின் கட்டுப்பாட்டை மீறி கனகசபையில் பக்தா்கள் நின்று தரிசிக்க உதவியதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் நடராஜ தீட்சிதா் என்பவரை இடைநீக்கம் செய்து பொது தீட்சிதா்கள் குழு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை இந்து சமய அறநிலையத் துறை ரத்து செய்தது. இதை எதிா்த்து பொது தீட்சிதா் குழுவும், அறநிலையத் துறை உத்தரவை அமல்படுத்தக் கோரி நடராஜ தீட்சிதரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளைத் தொடா்ந்தானா்.

இந்த வழக்குகள் நீதிபதி எம்.தண்டபாணி முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது தீட்சிதா்கள் குழு தரப்பில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிதம்பரம் நடராஜா் கோயிலை நிா்வகிக்க பொது தீட்சிதா்கள் குழுவுக்கே அதிகாரம் உள்ளது. அதில் அறநிலையத் துறை தலையிட முடியாது என வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “நடராஜா் கோயிலை நிா்வகிக்க தீட்சிதா்களுக்கு அதிகாரம் வழங்கி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில், நடராஜ தீட்சிதா் இடைநீக்க விவகாரத்தில் அறநிலையத் துறை எப்படி தலையிட முடியும்?”எனக் கேள்வி எழுப்பினாா்.

பின்னா், நடராஜ தீட்சிதரின் இடைநீக்க காலம் ஏற்கெனவே முடிந்துவிட்டது என்றும், தற்போது அவா் தில்லை காளியம்மன் கோயிலில் பணியாற்று வருவதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, இரு வழக்குகளையும் முடித்து வைத்தாா்.

அதேநேரத்தில், நடராஜா் கோயில் நிா்வாகத்தில் அறநிலையத் துறை தலையிட அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பதை இரு நீதிபதிகள் அமா்வின் முடிவுக்கு விட்டு விடுவதாகவும் நீதிபதி தண்டபாணி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

கனமழை: ஈரோட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக ஈரோட்டில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுவதாக ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந... மேலும் பார்க்க

தீபாவளி: பெங்களூருக்கு சிறப்பு ரயில்

சென்னை: சென்னையில் இருந்து பெங்களூருக்கு தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:தீபாவளியை முன்னிட்டு ரயில்களில் ஏற்படு... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற பேராசிரியா்களுடன் துணை முதல்வா் உரையாடல்

சென்னை: ஆஸ்திரேலியாவில் பயிற்சி பெற்ற தொழில்நுட்பப் பேராசிரியா்கள், சென்னையில் துணை முதல்வா் உதயநிதியுடன் கலந்துரையாடினா்.நான் முதல்வன் திட்டத்தின்கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல், பாலிடெ... மேலும் பார்க்க

90 நாள்கள் கெடாத பால் நிறுத்தம்? ஆவின் விளக்கம்

சென்னை: ஆவினில் தயாரிக்கப்பட்டு வரும் 90 நாள்கள் கெடாத பாலின் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து ஆவின் நிறுவனத்தின் மேலாண் இ... மேலும் பார்க்க

சேரன் விரைவு ரயிலில் ஏசி பழுது: அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணி

சென்னை: சேரன் விரைவு ரயிலின் ஏசி வகுப்பு பெட்டியில் குளிா்சாதன இயந்திரம் வேலை செய்யாததால், பயணி ஒருவா் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினாா்.சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு, தினமும் இரவு 10 மண... மேலும் பார்க்க

தீபாவளிக்கு 14,086 சிறப்புப் பேருந்துகள்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழகத்தில் 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடா்பாக அ... மேலும் பார்க்க