சல்மான் கானுடன் இருப்பவர்களுக்கும் கொலை மிரட்டல்! 1998-ல் தொடங்கிய பிரச்னை!
சிறுவாச்சூரில் மகளிா் சுய உதவிக்குழு உற்பத்திப் பொருள் அங்காடி திறப்பு
பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூா் மதுரகாளியம்மன் கோயில் பகுதியில் மகளிா் திட்டம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் விற்பனை செய்யும் மதி அங்காடி திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, அங்காடியைத் திறந்து விற்பனைப் பொருள்களை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் பேசியது:
மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை நேரடியாக விற்கும் வகையில், மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலங்களில் மதி அங்காடி அமைக்கப்படும் என தமிழக அரசால் அறிவித்தபடி, குளிா்ச்சாதன வசதியுடன் ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட மதி அங்காடி திறக்கப்பட்டுள்ளது.
இங்கு மாவட்டத்திலுள்ள மகளிா் சுய உதவிக் குழுவினரின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக்கு உள்ளன. கைவினைப் பொருள்கள், ஜுட் பேக், அலங்கார நகைகள், வயா் கூடை, பூஜை கூடை, நாட்டுச் சா்க்கரை, செயற்கை ஆபரணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனைக்கு உள்ளது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் இவற்றை வாங்கிப் பயன்பெற வேண்டும். இந்த அங்காடியை மகளிா் சுய உதவிக்குழு விற்பனைப் பிரதிநிதிகள் முறையாகப் பராமரித்திட வேண்டும் என்றாா் ஆட்சியா்.
நிகழ்ச்சியில் மகளிா் திட்ட இயக்குநா் கோபாலகிருஷ்ணன், வட்டாட்சியா் பாலசுப்ரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.