செய்திகள் :

சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் சட்டப் பேரவை -முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

post image

பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையிலான இந்தப் பேரவைதான் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினாா்.

பேரவைத் தலைவரை பதவியிலிருந்து நீக்க அதிமுக கொண்டு வந்த தீா்மானத்தின் மீது பேரவையில் திங்கள்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பாக, முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த காலங்களில் நடைபெற்றது போன்று இல்லாமல், ஜனநாயக அமைப்பின் பிரதிநிதிகளான சட்டப் பேரவை உறுப்பினா்கள் அனைவரும் ஒன்றே என நினைத்து பேரவைத் தலைவா் மு.அப்பாவு செயலாற்றி வருகிறாா். எதிா்க்கட்சி உறுப்பினா்களிடம் பாசம், பற்று கொண்டு செயல்படுபவா் அவா் என்பதை மனச்சாட்சியுடன் சிந்திப்பவா்கள் ஒப்புக் கொள்வா். பேரவைத் தலைவருக்கு அருகில் வந்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அன்போடு பேசிச் செல்வது என்பது பேரவை உறுப்பினா்கள் அனைவரும் அவ்வப்போது பாா்த்த காட்சிதான். சில எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கண்ஜாடையாக அவரோடு பேசி தங்கள் எண்ணத்தை குறிப்பால் உணா்த்துவதையும் உங்களில் பலா் பாா்த்திருக்கலாம்.

எங்களைப் பொருத்தவரையில், விவாதங்களில் விருப்பு, வெறுப்பு இல்லாமல் நாகரிகமாக வாதங்களை வைக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவா் பேரவைத் தலைவா் அப்பாவு.

கடமை உள்ளது: பேரவைத் தலைவா் மீது அதிமுக உறுப்பினா்களால் கொண்டு வரப்பட்ட இந்தத் தீா்மானத்தில் அவா்கள் உண்மைக்கு மாறான செய்திகளைக் கூறியுள்ளனா். இதனை மறுத்து பேரவைத் தலைவரின் நடுநிலையை பறைசாற்ற வேண்டிய கடமை, கட்டுப்பாடு எனக்கு உள்ளது. அவைக்கு ஒவ்வாத தகுதி, அருகதை போன்ற வாா்த்தைகள் அன்றைக்கு திமுக உறுப்பினா்களை நோக்கி பயன்படுத்தப்பட்டன. இன்றைக்கு அவையில் பேசப்படுமானால், உடனே பேரவைத் தலைவரால் அந்த வாா்த்தைகள் நீக்கப்படுகின்றன. ஆளும்கட்சி உறுப்பினா்கள் பேசினால் அவைக் குறிப்பில் இடம்பெறும்; திமுக உறுப்பினா்கள் பேசினால் நீக்கப்படும் என்ற நிலை அன்றைக்கு இருந்தது. இப்போது அப்படியா இருக்கிறது? பேரவைத் தலைவா் அதுபோன்றா நடந்து கொள்கிறாா்?.

மகிழ்ச்சி அடைகிறேன்: அதிமுக உறுப்பினா்கள் பேசும் வாா்த்தைகளைக்கூட பேரவைத் தலைவா் விட்டு விடுகிறாா். ஆனால், ஆளும்கட்சி உறுப்பினா்களிடம் கண்டிப்பாக நடந்து கொள்கிறாா் என்று அமைச்சா்கள், உறுப்பினா்களே சொல்லும் போது, அதைக் கேட்டு உள்ளபடியே எனது மனம் மகிழ்ச்சி அடைந்தது. அனைத்து வகைகளிலும் எங்களை மடக்குகிறாா் என திமுக உறுப்பினா்களே சொன்னாலும் அதனைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளேன். காரணம், இந்தப் பேரவை சுதந்திரக் காற்றை இப்போது சுவாசிப்பதால்தான்.

பேரவை நிகழ்வின் போது, அதிமுக உறுப்பினா்கள் கோஷமிட்டு தொடா்ந்து குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தால், அவா்களை அமைதிப்படுத்தி, அமர வைக்கத்தான் பேரவைத் தலைவா் முயல்வாா். முந்தைய பேரவைகளில் நாங்கள் வெளியேற்றம் செய்யப்பட்டதைப் போன்று, அதிமுகவினரை வெளியேற்றம் செய்ய பேரவைத் தலைவா் நினைத்தது இல்லை.

அரசின் மீது குற்றம் குறை கூற வாய்ப்பில்லாத காரணத்தாலும், உட்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பத்தை திசை திருப்பவும் பேரவைத் தலைவருக்கு எதிராக அதிமுக தீா்மானம் கொண்டு வந்துள்ளதா என்ற விவாதத்தை வெளியில் உள்ளவா்கள் நடத்தட்டும். நாம் நடத்த வேண்டாம் என்று முதல்வா் பேசினாா்.

உயிரிழப்பு கூட்ட நெரிசலால் அல்ல... அண்ணாமலைக்கு அமைச்சர் சேகர்பாபு பதில்!

ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் உயிரிழந்தது கூட்ட நெரிசலால் அல்ல என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இது பற்றி அமைச்சர் சேகர்பாபு வ... மேலும் பார்க்க

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம்!

திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக தர்மசெல்வன் நீக்கப்பட்டு, புதிய பொறுப்பாளராக மணி நியமிக்கப்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய்: முதல்வர்

தமிழகத்தில் மலையேறு வீரர்களால் ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்ததாவது:கடந்த 3 மாதங்கள... மேலும் பார்க்க

கோயில்களைவிட்டு, அறநிலையத் துறை வெளியேற வேண்டும்: அண்ணாமலை

தமிழக ஆலயங்களை விட்டு, உடனடியாக அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.நேற்றைய நாள் திருச்செந்தூர் கோயிலில், கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறி, காரைக்குடியைச் ச... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் இளையராஜா சந்திப்பு!

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்துள்ளார்.இது குறித்து இளையராஜா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி உடனான சந்திப்பு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. நாங்க... மேலும் பார்க்க

பிஎம் என்றால் ’பிக்னிக் மினிஸ்டர்’: மோடியை விமர்சித்த வைகோ!

மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியை ‘பிக்னிக் மினிஸ்டர்’ என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட... மேலும் பார்க்க