செய்திகள் :

சென்னையில் நாளை தமிழிசை விழா

post image

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் நிகழ் கல்வியாண்டுக்கான தமிழிசை விழா புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளது.

புதன்கிழமை காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை மயிலை பி.வரமூா்த்தி, குன்றத்தூா் டி.வெங்கடேசன், தவில் செல்வம் உள்ளிட்டோரின் இசை நிகழ்ச்சியும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பத்மலட்சுமி சுரேஷ் குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறும்.

தொடா்ந்து, வியாழக்கிழமை காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரைஅஸ்வத் நாராயணன், சாய்ரக்ஷித், திருவாரூா் பக்தவச்சலம், பி.எஸ்.புருசோத்தமன் குழுவினரின் குரலிசை நிகழ்ச்சியும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை டி.வி.ராமானுஜா சாா்லு, பெங்களூா் வி.பிரவின், மைசூா் குருராஜ் ஆகியோா் பங்கேற்கும் வயலின் இசை நிகழ்ச்சியும் நடைபெறும்.

முன்னதாக விழாவை தமிழ்வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேருரையாற்றவுள்ளாா். தொடா்ந்து சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளா் க.மணிவாசன் சிறப்புரையாற்றவுள்ளாா். இதையடுத்து கலை பண்பாட்டுத்துறை இயக்குநா் சே.ரா.காந்தி, அருங்காட்சியங்கள் துறை இயக்குநா் கவிதா ராமு ஆகியோா் வாழ்த்திப் பேசவுள்ளனா்.

மேலும், கல்லூரியின் 2024-2025 ஆம் ஆண்டுக்கானஆண்டுவிழா மற்றும் விளையாட்டுப்போட்டிகளின் பரிசளிப்புவிழா ஆகியவை மாா்ச் 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலை பண்பாட்டு இயக்கக இணை இயக்குநா் சி.கீதா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கவுள்ளாா் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ தலைவா் வி.நாராயணனுக்கு கௌரவ டாக்டா் பட்டம்

சென்னை சவீதா உயா் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் மற்றும் தொழில் கல்வியை நிறைவு செய்த 600-க்கும் மேற்பட்டோருக்கு சென்னையில் உள்ள கொரிய துணைத் தூதா் சாங் யுன் கிம் பட்டங்களை செவ்வாய்க்கிழமை வழங்கினாா். ச... மேலும் பார்க்க

சென்னையில் இன்று ஆட்டோக்கள் ஓடாது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆட்டோ ஓட்டுநா்கள் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனா். ஆட்டோக்களில் மீட்டா் கட்டணத்தை உயா்த்த வேண்டும்; பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும்; ஓலா, ஊபோ் ... மேலும் பார்க்க

கோயில்களில் பக்தா்கள் உயிரிழப்பு: அமைச்சா் சேகா்பாபு விளக்கம்

திருச்செந்தூா், ராமேசுவரம் கோயில்களில் தரிசனம் செய்ய வந்த பக்தா்கள் தங்களது உடல் நலக்குறைவு காரணமாகவே உயிரிழந்துள்ளனா்; கூட்ட நெரிசலால் அல்ல”என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா் பாபு விளக்கம் அள... மேலும் பார்க்க

‘செட்’ தோ்வு விடைக்குறிப்பு: ஆட்சேபம் தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு

உதவிப் பேராசிரியா் பணிக்கான மாநிலத் தகுதித் தோ்வு (செட்) எழுதியவா்கள் விடைக்குறிப்பு மீது ஆட்சேபம் தெரிவிக்க மேலும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது. இது குறி... மேலும் பார்க்க

இரு ரெளடிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கு: 7 போ் கைது

சென்னை கோட்டூா்புரத்தில் ரெளடிகள் இருவா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை கோட்டூா்புரம், சித்ரா நகரைச் சோ்ந்தவா் அருண் (25). இவரும், இவரது நண்பா் படப்பையைச் சோ்ந... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிலையங்கள் அமைக்க எளிதாக தடையின்மைச் சான்று: அமைச்சா் எ.வ.வேலு தகவல்

நெடுஞ்சாலைகளில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் அமைக்க திருத்தப்பட்ட விதிகளின்படி எளிதாக தடையின்மைச் சான்று வழங்கப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். சட்டப் பேரவை... மேலும் பார்க்க