செய்திகள் :

சென்னை: இரண்டு திருமணம்; பலருடன் சாட்டிங் - திருட்டு வழக்கில் சிக்கிய அறிமுக நடிகரின் பின்னணி!

post image

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் சுமதி (பெயர் மாற்றம்). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்து விட, மாமியார், இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார் சுமதி. இந்தச் சூழலில் மறுமணம் செய்து கொள்ள சுமதி, தன்னுடைய விவரங்களை  பிரபலமான திருமண தகவல் மையத்தில் கடந்த மே மாதம் பதிவு செய்தார். அதைப் பார்த்து கடந்த ஜூன் மாதம் சுமதியை போனில் தொடர்பு கொண்டிருக்கிறார் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அறிமுக நடிகர் சுரேஷ்குமார். பின்னர் இருவரும் தங்களின் கடந்த கால இல்லற வாழ்க்கை விவரங்களை பகிர்ந்து கொண்டதோடு மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். அதையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமதியும் சுரேஷ்குமாரும் வள்ளூவர்கோட்டம் பேருந்து நிலையம் அருகே நேரில் சந்தித்து பேசினர். அதன்பிறகு சுமதியின் தங்கச் செயின் திருட்டு போனது. இதுகுறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சுமதி புகாரளிக்க உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சபரிதாசன் விசாரணை நடத்தினார். இந்த திருட்டு வழக்கில் அறிமுக நடிகர் சுரேஷ்குமாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

மறுமணம்

 இந்த வழக்கு குறித்து தேனாம்பேட்டை போலீஸார் கூறுகையில், ``புகார் கொடுத்த  சுமதியிடம் செயின் எப்படி காணாமல் போனது என்று விசாரித்தோம். அப்போது அவர், `நானும் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அறிமுக நடிகர் சுரேஷ்குமார் சக்ரவர்த்தியும் கடந்த 17-ம் தேதி இரவு வள்ளூவர்கோட்டம் பேருந்து நிலையம் அருகே சந்தித்து காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது என்னுடைய தங்கச் செயினைக் கவனித்த சுரேஷ்குமார், டாலர் அழகாக இருக்கிறது என கூறியதோடு செயினை கழற்றி தரும்படி கேட்டார். பின்னர் செயினை வாங்கிப் பார்த்த  சுரேஷ்குமார் அதை என்னிடம் திரும்ப கொடுத்தார். அதை வாங்கிய நான் கழுத்தில் அணியாமல் என்னுடைய ஹேண்ட் பேக்கில் வைத்தேன். அதன்பிறகு தனக்கு தாகமாக இருக்கிறது. பக்கத்தில் உள்ள கடையில் குளிர்பானம் வாங்கி வரும்படி என்னிடம் சுரேஷ்குமார் கூறினார். அதை நம்பி நானும் ஹேண்ட் பேக்கை காருக்குள்ளேயே வைத்துவிட்டு குளிர்பானம் வாங்கி வந்து கொடுத்தேன். அதைக் குடித்துவிட்டு அவசரமா ஒரு மீட்டிங் இருக்கிறது கூறிய சுரேஷ்குமார் காரில் அங்கிருந்து சென்றுவிட்டார். அதன் பிறகு ஹேண்ட் பேக்கில் வைத்திருந்த செயினை பார்த்தபோது அது காணவில்லை. உடனே சுரேஷ்குமாரிடம் போனில் விவரத்தைக் கூறியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். அதனால் சுரேஷ்குமார் மீது எனக்கு சந்தேகமாக இருக்கிறது' என சுமதி எங்களிடம் தெரிவித்தார்.

சுமதி கூறிய தகவலின்படி சுரேஷ்குமாரைத் தேடினோம். ஆனால் அவர் சுமதியிடம் கூறிய தகவல்கள் பொய் எனத் தெரியவந்தது. அதனால் சுரேஷ்குமாரைப் பிடிக்க சுமதி மூலம் வலைவிரித்தோம். இதற்காக சுமதியை, அதே திருமண தகவல் மையத்தில் ராணி (பெயர் மாற்றம்) என்ற பெயரில் மீண்டும் பதிவு செய்ய வைத்தோம். பின்னர்  சுரேஷ்குமாரிடம் வாட்ஸ்அப்பில் சேட்டிங் செய்ய வைத்தோம். அப்போது சுரேஷ்குமார், தன்னுடன் சேட்டிங் செய்வது சுமதி எனத் தெரியாமல் ராணியிடமும் தன்னுடைய வழக்கமான ஸ்டைலில் வாக்குறுதிகளை அள்ளிவீசினார். இதையடுத்து சுரேஷ்குமாரிடம் கடந்த 19-ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நேரில் சந்திக்கலாமா என ராணி மெசேஜ் அனுப்பியதும் அதற்கு ஓகே என பதிலளித்தார் சுரேஷ்குமார். அந்த ஹோட்டலுக்கு சுமதியுடன் நாங்கள் மப்டியில் சென்றோம். அப்போது காரில் பந்தாவாக வந்திறங்கிய சுரேஷ்குமாரை மடக்கிப் பிடித்தோம். பின்னர் அவரை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தோம்.

வாட்ஸ்அப் சேட்டிங்

அப்போது, சார், என் மீது பொய்யாக புகார் கொடுத்திருக்கிறார் சுமதி. நான் அழகாக இருப்பதால் என்னை மறுமணம் செய்து கொள்ள சுமதி கட்டாயப்படுத்தினார். அதற்கு நான் சம்மதிக்கவில்லை. அதனால்தான் இப்படியொரு புகாரை என் மீது அவர் கொடுத்திருக்கிறார் என்று எங்களிடம் சுரேஷ்குமார் கூறினார். இதையடுத்து சுமதியிடம் சுரேஷ்குமார் கூறிய தகவலை குறிப்பிட்டு விசாரித்தபோது அவர், சுரேஷ்குமார் தனக்கு அனுப்பிய வாட்ஸ்அப் சேட்டிங்கை எங்களிடம் காண்பித்தார். அதில் சுமதியை மறுமணம் செய்து கொள்ள சுரேஷ்குமார் உறுதியளித்தது தொடர்பான மெசேஜ்கள் இருந்தன. இதையடுத்து சுரேஷ்குமாரை கைது செய்து செயின் குறித்து விசாரித்தோம். அப்போது அவர், சுமதியின் ஹேண்ட் பேக்கிலிருந்து செயினை திருடி அதை விற்று ஐபோன் ஒன்றை வாங்கிவிட்டதாகக் கூறினார். அதன்பிறகு அந்த ஐபோன் உள்பட 4 செல்போன்களை சுரேஷ்குமாரிடமிருந்து பறிமுதல் செய்தோம். அதில், சில பெண்களுக்கு சுமதிக்கு அனுப்பியதைப் போல மறுமண வாக்குறுதி மெசேஜ்களை அனுப்பியிருந்தார். அதுதொடர்பாக சுரேஷ்குமாரிடம் விசாரித்தபோது சுமதி மட்டுமல்லாமல் மறுமணம் செய்ய காத்திருக்கும் பெண்களில் வசதியானவர்களை டார்க்கெட் செய்து அவர்களிடம் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. மேலும் கடந்த 2024-ம் ஆண்டு நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவரையும் மறுமண ஆசை காண்பித்து ஏமாற்றிய குற்றச்சாட்டில் நுங்கம்பாக்கம் போலீஸாரால் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தகவலும் தெரியவந்தது. சிறையிலிருந்து வந்த பிறகும் அந்தப் பெண் தரப்பினருக்கு தொடர்ந்து இடையூறு செய்த குற்றத்துக்காக மேலும் 3 வழக்குகள் சுரேஷ்குமார் மீது பதிவாகியிருப்பதும் தெரிந்தது. சுரேஷ்குமாரால் பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகாரளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கைதான சுரேஷ்குமாருக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடந்து மனைவிகளைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் தினமும் உடற்பயிற்சி செய்து ஜிம்பாடியாக ஊரைச் சுற்றி வந்திருக்கிறார். மேலும் ஆடம்பர வாழ்க்கைக்காக மறுமணம் செய்ய காத்திருக்கும் வசதியான பெண்களிடம் பிசினஸ்மேன், நடிகர் என பொய்யான வாக்குறுதிகளை கூறி பணம், தங்க நகைகளை பெற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஆனால் இவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகாரளிக்கவில்லை. இதில் இன்னொரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், இவர் கைதான தகவல் கூட தெரியாமல் சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர், சுரேஷ்குமாரின் செல்போன் நம்பருக்கு நாம் எப்போது சந்திக்கலாம் என மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தார். அவரைத் தொடர்பு கொண்டு சுரேஷ்குமாரின் சுயரூபத்தை தெரிவித்ததும் அந்தப் பெண் டாக்டர், மெசேஜ் அனுப்புவதை நிறுத்தினார். இதைப் போல திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவரும் சுரேஷ்குமாரை சந்திக்க சென்னைக்கு வர தயாராக இருந்தார். அவரிடமும் விவரத்தைக் கூறினோம். சுரேஷ்குமாரின் செல்போனிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ள ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்து அவருக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுக்கப்படும்" என்றார்.

குடியாத்தம் குழந்தை கடத்தல் விவகாரம்; 2 இளைஞர்கள் கைது - பணம் பறிக்கத் திட்டமிட்டு துணிகரம்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை பவளக்காரத் தெருவைச் சேர்ந்தவர் வேணு (வயது 33). இவரின் மனைவி ஜனனீ (28). இவர்களது மூன்றரை வயது குழந்தை யோகேஷ், நேற்று மதியம் 12.20 மணியளவில் மர்ம நபர்கள... மேலும் பார்க்க

சட்டவிரோத மண் விற்பனை: ”நாளைக்கு நாங்கள் இல்லாமல் போகலாம்”- முதல்வர் பாராட்டிய நிமல் ராகவன் ஆதங்கம்!

பட்டுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டில் அமைந்துள்ள செம்புரான் குளத்தில் மண் எடுக்கப்பட்டு தனியாரிடம் விற்பனை செய்து வந்துள்ளனர். இது குறித்து பாக்கியம் நகரைச் சேர்ந்த நீர் நிலைகள் மீட்பு பண... மேலும் பார்க்க

``உங்க ஆதாரில் தீவிரவாதிகள் சிம் வாங்கி பணப் பரிவர்த்தனை'' - முதியவரை மிரட்டி ரூ.23 கோடி கொள்ளை

தொடரும் டிஜிட்டல் கைது மோசடி சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு, மும்பை கிரைம் பிராஞ்ச் என்று பல பொய்களைச் சொல்லி அப்பாவி பொதுமக்களை டிஜிட்டல் முறையில் போலியாகக் கைது செய்து அவர்களிடம் இருக்கும் மொத்தப் பணத்தைய... மேலும் பார்க்க

``ரகசிய கேமரா, பாலியல் சீண்டல்'' - மாணவிகள் புகார், டெல்லி சாமியார் தலைமறைவு - நடந்தது என்ன?

மாணவிகள் புகார் டெல்லி விகார் குஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்வி நிறுவனத்தில் இயக்குநராக இருந்தவர் சுவாமி பார்த்தசாரதி. சுவாமி பார்த்தசாரதி அக்கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவிகளை இரவு ந... மேலும் பார்க்க

வத்தலகுண்டு: உதவி செய்வது போல் நடித்து ரூ. 10 லட்சம் திருட்டு; 2 மணி நேரத்தில் பணத்தை மீட்ட போலீஸ்

மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம் (80). இவர் கோயமுத்தூரில் உள்ள தனது மகன் வீட்டிற்குச் சென்று விட்டு அங்கிருந்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள வங்கிக் கணக்கிற்கு ரூ. 10... மேலும் பார்க்க

``அமித் ஷா, அஜித் தோவலிடம் கான்பரன்ஸ் கால்'' - வங்கி அதிகாரியிடம் ரூ.4 கோடி மோசடி செய்த உறவினர்கள்

தினம் தினம் பொதுமக்கள் ஏதாவது ஒரு வழியில் மோசடியால் பாதிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். இதில் டிஜிட்டல் கைது மோசடி ஒட்டுமொத்த நாட்டையும் கலங்கடித்துக்கொண்டிருக்கிறது. புனேயைச் சேர்ந்த ஓய்வு பெற... மேலும் பார்க்க