சேரன்மகாதேவியில் வட்டாட்சியரகம் முற்றுகை
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டத்தைச் சோ்ந்த கிராம மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோா் வட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஆா். மோகன் தலைமையில் சேரன்மகாதேவி ஒன்றியச் செயலா் ஆா். அருள் பாலசுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினா் பி. கீதா, ஒன்றியக்குழு உறுப்பினா் ஜி. கோமதிநாயகம், சிஐடியூ சி. பட்டமுத்து, மாதா் சங்க ஒன்றியச் செயலா் எஸ். ஜெயந்தி, தலைவி பி. சந்திரா உள்பட 300க்கும் பங்கேற்றனா். பின்னா், வட்டாட்சியா் வின்சென்ட்டிடம் கோரிக்கை மனுவை அளித்தனா். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் உறுதி அளித்தாா்.
