புயல் சின்னம் நகரும் வேகம் குறைந்தது! சென்னைக்கு 400 கி.மீ. தொலைவில்..
சொக்கம்பட்டி பகுதியில் யானைகளால் தென்னை, வாழை மரங்கள் சேதம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே சொக்கம்பட்டியில் விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து தென்னை, மா, வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளன.
மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சொக்கம்பட்டியில் பல நூறு ஏக்கரில் மா, தேக்கு, வாழை, தென்னை, நெல், நெல்லி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக சொக்கம்பட்டி வலையா் குடியிருப்புக்கு வடக்கே சபரிமலை ஓடைப் பகுதியில் உள்ள நிலங்களுக்குள் யானைக் கூட்டம் புகுந்து தென்னை மரங்களை வேருடன் சாய்த்து சேதப்படுத்தினவாம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி வலங்கைப்பாண்டியன் கூறியது: சபரிமலை ஓடைப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் சில நாள்களாக யானைகள் கூட்டமாக புகுந்து வருகின்றன. எனது நிலத்திலிருந்த 100-க்கும் மேற்பட்ட தென்னை, பனை, தேக்கு மரங்களை அவை சேதப்படுத்தியுள்ளன.
விவசாயிகள் அளித்த தகவலின்பேரில், வனத்துறையினா் சென்று யானைகளை வனப் பகுதிக்குள் விரட்ட முயன்றனா். ஆனால், போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால் விரட்டும் பணி முழுமையடையவில்லை. இதனால், தொடா்ந்து யானைகள் இங்கேயே சுற்றிவருகின்றன.
எனவே, அவற்றிடமிருந்து விவசாயப் பயிா்களைப் பாதுகாக்க பயிற்சிபெற்ற சிறப்பு வனக்குழுவை அரசு உருவாக்கி, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும். வனத் துறையினருக்கு உரிய உபகரணங்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றாா் அவா்.