நெப்போலியன் குடும்பத்தின் 900 கோடி மதிப்பிலான நகைகள் திருட்டு! - சினிமாவை மிஞ்சி...
"ஜனநாயகன் முதல் நாள் படப்பிடிப்பு.."- மமிதா பைஜூ ஷேரிங்ஸ்
'பிரேமலு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார் மமிதா பைஜூ சமீபத்தில் வெளியான 'டியூட்' படத்தில் நடித்திருந்தார்.
தவிர விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். அதேபோல 'சூர்யாவின் 46', 'தனுஷின் 54' படத்திலும் மமிதா பைஜூ நடிக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் மலையாள ஊடகமான 'மனோரமா'விற்கு அளித்த பேட்டியில் விஜய், சூர்யா, தனுஷ் உடன் பணியாற்றுவது குறித்து பேசியிருக்கிறார்.
அவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

"விஜய் சாருடன் நடித்தபோது என்னுடைய கனவு நனவாகியதுபோல் இருந்தது.
'ஜனநாயகன்' செட்டில் முதல் நாளிலேயே நான் பதற்றமாகவும், அதே நேரத்தில் மகிழ்ச்சியாகவும் இருந்தேன்.
ஏனெனில் விஜய் சாருடன் இணைந்து பணியாற்றுவதை என்னால் நம்பவே முடியவில்லை.
ஆனால் விஜய் சார் தானாகவே வந்து என்னிடம் பேசி, என்னை சௌகரியமாக உணர வைத்தார்.
அந்த சமயத்தில் நானும் அவர்களுள் ஒருவராக உணர்ந்தேன். அதேபோல சூர்யாவுடன் நான் 'வணங்கான்' படத்தில் நடிக்க இருந்தேன்.
ஆனால் சில காரணங்களால் அது நடைபெறாமல் போய்விட்டது. அதன்பின் தான் 'கருப்பு' படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
'ஒரு வழியாக நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடிக்கிறோம்' என சூர்யா சார் சிரித்துக்கொண்டே சொன்னார்" என பகிர்ந்த மமிதா பைஜூ தனுஷுடன் பணியாற்றியது குறித்தும் பேசியிருக்கிறார்.

"தனுஷ் சார் எனக்கு படப்பிடிப்பு நேரங்களில் நிறைய உதவி செய்தார். ஒருமுறை, அவருடைய நடிப்பில் மெய்மறந்து போனதால் என் வசனத்தைக் கூட மறந்துவிட்டேன்.
இப்படிப்பட்ட அற்புதமான நடிகர்களுடன் பணியாற்றிய அனுபவம் உண்மையிலேயே மகிழ்ச்சியானது" என்று பகிர்ந்திருக்கிறார்.


















