செய்திகள் :

ஜான்சி மருத்துவமனையில் விஐபி வரவேற்பு: காங்கிரஸ் கருத்தும் துணை முதல்வர் பதிலும்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி அரசு மருத்துவமனையில், நேரிட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் பலியான நிலையில், அங்கு வந்த தனக்கு விஐபி வரவேற்புக்கான ஏற்பாடுகளை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு துணை முதல்வர் பிரஜேஷ் பதக் உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோர் கண்ணீருடன் கதறிக்கொண்டிருக்கும் போது, துணை முதல்வரை வரவேற்க மருத்துவமனை தயாராகி வருவது குறித்து காங்கிரஸ் விமர்சித்திருந்த நிலையில், இந்த உத்தரவு வெளியாகியிருக்கிறது.

வெள்ளிக்கிழமை இரவு, அரசு மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் அங்கு சிகிச்சை பெற்று வந்த 10 குழந்தைகள் பலியாகின.

நிலைமையை நேரில் ஆய்வு செய்ய துணை முதல்வர் பிரஜேஷ் பதக் இன்று மருத்துவமனைக்கு விரைந்தார்.

அப்போது அவரது வருகையை முன்னிட்டு, மருத்துவமனைக்கு அருகே வரவேற்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனைப் பார்த்த அவர் அதிருப்தி அடைந்தார்.

தொடர்ந்து அவர் வெளியிட்ட விடியோ செய்தியில், நான் ஜான்சி மருத்துவக் கல்லூரிக்கு வருவதற்கு முன்பு, சாலைகளில் பொடிகள் துவப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்தது. இதனை நான் மிகவும் கண்டிக்கிறேன், இதனை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்துகிறேன், ஒருபோதும் இதனை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

துணை முதல்வரின் வருகையை முன்னிட்டு, ஜான்சி மருத்துவமனை வளாகம் முழுக்க சுத்தப்படுத்தப்பட்டு அழகாக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் பதிவிடப்பட்டிருந்தது.

மருத்துவமனை வளாகம் முழுக்க குழந்தைகளை இழந்த பெற்றவர்களும் உறவினர்களும் கண்ணீர்விட்டுக்கொண்டிருக்கும் போது, மருத்துவமனைக்கு வரும் துணை முதல்வரை வரவேற்க வளாகம் தூய்மைப்படுத்தப்படுகிறது என்று விமர்சித்திருந்த நிலையில், துணை முதல்வர், வளாகத்தை சுத்தப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

10 யானைகள் பலி: வனத்துறை ஊழியர்களை மாற்ற அரசு முடிவு!

மத்தியப் பிரதேசத்தில் 10 காட்டு யானைகள் பலியானதைத் தொடர்ந்து வனத்துறை ஊழியர்களை மாற்ற அரசு முடிவெடுத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பாந்தவர்க் புலிகள் காப்பகத்தில் கடந்த அக். 29 முதல் 31 ஆம் தேதிக்குள... மேலும் பார்க்க

மகா விகாஸ் அகாடி 175 இடங்களில் வெற்றி பெறும்: கர்நாடக துணை முதல்வர் சிவகுமார்

மகா விகாஸ் அகாடி 175 இடங்களில் வெற்றி பெறும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, மகாராஷ்டிர தேர்தலில் காங்கிரஸ், சரத் பவார், உத்தவ் தாக்கரே, அனைவரும... மேலும் பார்க்க

ஜோ பைடனைப் போல பிரதமர் மோடி நினைவை இழந்து வருகிறார்: ராகுல் காந்தி

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனைப் போல பிரதமர் நரேந்திர மோடி நினைவை இழந்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற நவம்பர் 20 அன்று நடைபெற உள்ளது.... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: கடத்தப்பட்ட 6 பேரும் சடலங்களாக மீட்பு!

மணிப்பூரில் கடத்தப்பட்ட 6 பேரும் சடலமாக மீட்கப்பட்டிருப்பதால் அங்கும் மீண்டு பதற்றம் நிலவுகிறது.மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் ... மேலும் பார்க்க

பாபா சித்திக் கொலை வழக்கு: 24-வது நபர் கைது

பாபா சித்திக் கொலை வழக்கில் 24-வது நபர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை மும்பை பாந்த்ரா பகுதியில் கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி இரவு மூன்று போ் வழிமறித்து... மேலும் பார்க்க

வீட்டை பெங்களூருக்கு மாற்றினால்.. சமூக வலைதளத்தை இரண்டாக்கிய ஸ்ரீதர் வேம்பு பதிவு

பெங்களூருவை உங்கள் வீடாக மாற்றிக்கொண்டால், கன்னடம் கற்றுக்கொள்ள வேண்டும், உங்கள் பிள்ளைகளும் கன்னடம் கற்க வேண்டும் என்று ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிவால், சமூக வலைதளமே இரண்டாகிக் கிடக்கிறது.பொதுவா... மேலும் பார்க்க