Delhi: `காற்றுமாசால் ஆயுட்காலம் குறைகிறது’... அவதிப்படும் டெல்லி மக்கள் - அதிர்ச...
ஜி20 உச்சி மாநாடு: பிரேஸில் சென்றடைந்தார் பிரதமர் மோடி
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க திங்கள்கிழமை பிரதமா் மோடி பிரேஸில் சென்றடைந்தார்.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் எக்ஸ் தளத்தில், G20 உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் இறங்கினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு புகைப்படங்களையும் அதில் பகிரப்பட்டுள்ளது.
உண்மையான பாசம் காட்டும் திருமாவளவன்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் தளப் பதிவில், "ஜி 20 உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரேஸிலில் தரையிறங்யுள்ளேன். உச்சிமாநாட்டின் விவதாங்கள் மற்றும் பல்வேறு உலகத் தலைவர்களுடன் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் நவ. 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமா் மோடி, கயானாவில் மூன்று நாள்கள் (நவ.19-21) சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.