செய்திகள் :

ஜோஃப்ரா ஆர்ச்சரை குறிவைத்தது ஏன்? திலக் வர்மா பதில்!

post image

இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப் பந்துவீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராக அதிரடியாக விளையாடியது ஏன் என்பது குறித்து திலக் வர்மா பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி நேற்று (ஜனவரி 25) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாற, ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக விளையாடிய திலக் வர்மா அணிக்கு வெற்றி பெற்றுத் தந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 55 பந்துகளில் 72 ரன்கள் (4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பந்துவீச்சில் அவர் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

இதையும் படிக்க: 2024-ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதை வென்ற நியூசி. ஆல்ரவுண்டர்!

ஜோஃப்ரா ஆர்ச்சரை குறிவைத்தது ஏன்?

இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப் பந்துவீச்சாளரான ஜோஃப்ரா ஆர்ச்சரை குறிவைத்து அதிரடியாக விளையாடியது ஏன் என்பது குறித்து திலக் வர்மா பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஜோஃப்ரா ஆர்ச்சர்

இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணியின் சிறந்த பந்துவீச்சாளருக்கு எதிராக அதிரடியாக விளையாட விரும்பினேன். சிறந்த பந்துவீச்சாளருக்கு எதிராக அதிரடியாக விளையாடினால், மற்ற பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் ஏற்படும். அதனால், வீரர்கள் மறுமுனையில் விக்கெட்டுகளை இழந்த போதிலும், இங்கிலாந்து அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாட விரும்பினேன். நான் அதிரடியாக விளையாடுவது மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாட உதவியாக இருக்கும்.

இதையும் படிக்க: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகும் இந்திய ஆல்ரவுண்டர்!

ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு எதிராக நான் விளையாடிய ஷாட்டுகள் அனைத்தும் வலைப்பயிற்சியின்போது பயிற்சி செய்தவையே. அவருக்கு எதிராக எந்த மாதிரியான ஷாட்டுகளை விளையாட வேண்டும் என்பதற்கு தயாராக இருந்தேன். அதனால், எனக்கு சிறந்த முடிவுகள் கிடைத்தன என்றார்.

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 ஓவர்களை வீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரண்டாவது டி20 போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர் 60 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சி கோப்பையில் விராட் கோலி; பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு!

ரஞ்சி கோப்பை போட்டிக்கான பயிற்சியில் விராட் கோலி ஈடுபட உள்ளதால் மைதானத்துக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி சமீப காலமாக தடுமாற்றமான ஆட்டத... மேலும் பார்க்க

2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஆப்கானிஸ்தான் வீரர்!

ஐசிசியின் கடந்த ஆண்டுக்கான ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருதினை ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் அஸ்மதுல்லா ஓமர்சாய் வென்றுள்ளார்.ஆப்கானிஸ்தன் அணியின் ஆல்ரவுண்டரான அஸ்மதுல்லா ஓமர்சாய், கடந்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபிக்கான டிக்கெட் விற்பனையை தொடங்கும் ஐசிசி!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனையை ஐசிசி நாளை (ஜனவரி 28) தொடங்கவுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கி மார்ச் 9 ஆம் தேதி வரை நடைபெறு... மேலும் பார்க்க

இந்திய அணியின் கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்படுவாரா? முன்னாள் வீரர் பதில்!

இந்திய அணியின் நீண்ட கால கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசியுள்ளார்.இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரா... மேலும் பார்க்க

2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் வீராங்கனை விருதை வென்ற ஸ்மிருதி மந்தனா!

கடந்த ஆண்டுக்கான ஐசிசியின் சிறந்த ஒருநாள் வீராங்கனை விருதினை இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா வென்றுள்ளார்.கடந்த ஆண்டு ஒருநாள் போட்டிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டமைக்காக ஸ்மிருதி மந்தனாவுக்கு இந்த ... மேலும் பார்க்க

2024-ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா!

ஐசிசியின் கடந்த ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான விருதினை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார்.இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு கடந... மேலும் பார்க்க