டி20 தரவரிசை: முதலிடத்தில் ஹார்திக் பாண்டியா! 3-வது இடத்தில் திலக் வர்மா!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய ஆல்ரவுண்டர் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
அவருடன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அடுத்தடுத்து சதம் விளாசிய இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா பேட்டர்கள் தரவரிசையில் ஒரே அடியாக முதல் மூன்று இடங்களுக்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் விற்பனையாகும் விராட் கோலியின் பேட்..! விலை ரூ.1.65 லட்சம்!
பேட்டர்கள் தரவரிசையில் 22 வயதான திலக் வர்மா 4 போட்டிகள் கொண்ட தொடரில் 280 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது மற்றும் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் அவருக்குப் பின்னால் நான்காவது இடத்தில் உள்ளார்.
ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஹார்திக் பாண்டியா முதலிரு இடங்களில் இருந்த இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன், நேபாள் வீரர் திபேந்தர சிங் இருவரையும் விஞ்சி முதலிடத்தைப் பிடித்துள்ளார். பாண்டியா இந்திய அணியின் 2 வது போட்டியின் போது 39* ரன்கள் விளாசி இக்கட்டான நிலையில் இருந்து மீட்டார்.
14 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா வருகிறாா் மெஸ்ஸி..! கேரளத்தில் சர்வதேச கால்பந்து போட்டி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டு சதங்கள் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் 17 இடங்கள் முன்னேறி 22 வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா 5 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தையும், நாதன் எல்லிஸ் 15 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தையும், இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தையும் பிடித்துள்ளார்.