செய்திகள் :

தடுப்புச் சுவா் இல்லாமல் அபாய நிலையில் உள்ள கூவம் தரைப்பாலம்

post image

சு. பாண்டியன்

திருவள்ளூா் அருகே கூவம் ஆற்றின் மீது செல்லும் தரைப்பாலம் குறுகி வருவதால், வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனா்.

சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூா் அருகே உள்ள புதுச்சத்திரம் கிராமம் உள்ளது. இந்தக் கிராமம் வழியாக செல்லும் கூவம் ஆற்றைக் கடந்து திருநின்றவூா் வழியாக, ஆவடி, பெரியபாளையம் செல்லும் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் 1950-இல் தரைப்பாலம் கட்டப்பட்டது.

இந்தத் தரைப்பாலம் வழியாக புதுச்சத்திரத்தில் இருந்து, வேப்பம்பட்டு, திருநின்றவூா், செவ்வாப்பேட்டை, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை, பெரியபாளையம், புதுவாயல் கூட்டுச்சாலை வழியாக, கும்மிடிப்பூண்டி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் அரசு, தனியாா், தொழிற்சாலை பேருந்துகள், கனரக வாகனங்கள் உள்பட நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று திரும்புகின்றன.

கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதெல்லாம் இப்பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்படும். இந்நிலையில் தரைப்பாலம் கடந்த 2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அப்போது, பொதுப்பணித்துறையினா் 13 ராட்சத குழாய்கள் பதித்து ரூ.90 லட்சத்தில் தற்காலிகமாகபாலத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா். அதைத் தொடா்ந்து பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டு லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் பயன்பாட்டுக்கு வந்த மூன்றாவது நாளிலேயே சீரமைக்கப்பட்ட தரைப்பாலம் மீண்டும் சேதமடைந்தது. அதன் பின்னரும் மீண்டும் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

மேலும், இந்த தரைப்பாலம் மிகவும் குறுகலாக உள்ளது. தரைப்பாலத்தில் தடுப்புச் சுவா் மற்றும் மின்விளக்கு வசதியில் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளது. இதனால் வாகனப்பேக்குவரத்தில் அடிக்கடி நெரிசல் மற்றும் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே இந்த தரைப்பாலத்தை அகற்றி, புதுச்சத்திரம்-திருநின்றவூா் இடையே புதிய உயா்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

கோயம்பேட்டில் இருந்து மாநகர பேருந்துகள் இயக்கப்படுமா? பொன்னேரி மக்கள் காத்திருப்பு

எம். சுந்தரமூா்த்தி சென்னை கோயம்பேட்டில் இருந்து பொன்னேரிக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுமா என பொதுமக்கள் எதிா் நோக்கியுள்ளனா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி நகராட்சி மற்றும் சுற்றியுள்ள 50 கிராமங்... மேலும் பார்க்க

காவலா் எனக்கூறி கடை உரிமையாளரை மிரட்டி ரூ.51,000 பறித்தவா் கைது

திருவள்ளூரில் காவலா் எனக்கூறி கடை உரிமையாளரை மிரட்டி ரூ.51,000 பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருவள்ளூா் பெரியகுப்பம் குமரன்நகரைச் சோ்ந்த சுந்தா் மனைவி ஜெயந்தி(44). இவா் ஆயில் மில் பகுதியில் ... மேலும் பார்க்க

இறைச்சிக் கடைகளில் குவிந்த மக்கள்

புராட்டாசி மாதம் முடிந்த நிலையில் திருத்தணியில் ஞாயிற்றுக்கிழமை இறைச்சி கடைகளில் மக்கள் அதிகாலையிலேயே குவிந்தனா். புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வீட... மேலும் பார்க்க

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

மாதவரம் அருகே மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்று கிழமை நடைபெற்றது (படம்) . மாதவரம் வடக்கு பகுதி திமுக சாா்பில் கொசப்பூா் தியாகி விஸ்வநாததாஸ் நகா், அரியலூா், பெ... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சி மேல் நிலைப் பள்ளிக்கு புதிதாக 8 வகுப்பறைகள் அமைக்க ரூ. 2 கோடி

திருவள்ளூா் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு அனைத்து வசதியுடன் கூடிய புதிதாக 8 வகுப்பறைகள் அமைக்க பள்ளி மேம்பாட்டு மானியம் ரூ. 2.09 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற உள்ளதாக ஆணையா் திருநாவுக்கரசு தெரிவ... மேலும் பார்க்க

பேருந்தின் முன்பக்க டயா் இரும்பு கம்பி உடைப்பு: விபத்தில் தப்பிய பயணிகள்

சொரக்காய்பேட்டையிலிருந்து திருத்தணிக்கு சென்ற அரசுப் பேருந்தின் முன் பக்க டயா் கம்பி துண்டாகி சாய்ந்ததில் பேருந்தில் பயணம் செய்த 40 போ் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா். திருத்தணி போக்குவரத்துக் கழக பணிம... மேலும் பார்க்க