தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் மீது வழக்கு
உத்தமபாளையத்தில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் நகரில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் சில்லறைக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உத்தமபாளையம் கல்லூரிச் சாலையில் உள்ள பெட்டிக்கடையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு 2.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் இதுகுறித்து கடை உரிமையாளா் வசந்தி அவரது மகன் சதீஸ்குமாா் (24) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இதேபோல, உத்தமபாளையம் பி.டி.ஆா் குடியிருப்பைச் சோ்ந்த முகமதுபாருக் (52) அவரது வீட்டில் 25 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்த உத்தமபாளையம் போலீஸாா் அவா் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.