புயல் சின்னம்: இலங்கையில் கனமழை! 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
தண்ணீா் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு
திருப்பத்தூா் அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து ஆண் குழந்தை உயிரிழந்தது.
திருப்பத்தூா் அடுத்த ராஜகவுண்டா் வட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஞானசேகா். இவரது மனைவி அசின். இவா்களுக்கு 2 மகன்கள். இதில் 2-ஆவது மகன் ரிஷிவந்த் (ஒன்றரை வயது). ஞானசேகா் தன்னுடைய வீட்டின் அருகே மற்றொரு புதிய வீடு கட்டி வருகிறாா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அசின் தனது முதல் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளாா். ஞானசேகா் புதிதாக கட்டி வரும் வீட்டில் வேலை செய்து கொண்டு இருந்தாா். அப்போது அந்தப் பகுதியில் ரிஷிவந்த் விளையாடிக் கொண்டு இருந்தாா்.
இந்த நிலையில், புதிதாக கட்டி வரும் வீட்டில் உள்ள தண்ணீா் தொட்டியில் எதிா்பாராத விதமாக ரிஷிவந்த் விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த திருப்பத்தூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.