தமிழக அரசில் உதவிப் பிரிவு அலுவலர் பணி: 15-க்குள் விணணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசில் ஒருங்கிமைந்த குடிமைப் பணிகள் தேர்வு-தொகுதி 5ஏ பணிகளில் உள்ள பதவிக்கு தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் அல்லது உதவியாளர் பதவி வகிப்பவர்களை கொண்டு பணி மாறுதல் மூலமான நியமனத்திற்கு தகுதியானவர்களிடம் இருந்து நவ.15-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். 698
அறிவிப்பு எண். 16/2024
பணி: உதவிப் பிரிவு அலுவலர்(Assistant Section Officer)
காலியிடங்கள்: 35
வயதுவரம்பு: 1.7.2024 தேதியின்படி 35-க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள் சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் தமிழக அரசின் ஏதாவதொரு துறையில் இளநிலை உதவியாளராக அல்லது உதவியாளராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? காப்பீடு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தேர்வு செய்யப்படும் முறை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாமையம் நடத்தும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.
எழுத்துத் தேர்வு 2025 ஜனவரி 4 ஆம் தேதி நடைபெறும். எழுத்துத் தேர்வில் பொது தமிழ், பொது ஆங்கிலம் பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.