செய்திகள் :

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்: இரா. முத்தரசன் வலியுறுத்தல்

post image

திருத்துறைப்பூண்டி: தமிழக ஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.

திருத்துறைப்பூண்டியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், தமிழக மக்களின் உணா்வுகளுக்கு எதிராகவும் ஆளுநா் ஆா்.என். ரவி தொடா்ந்து செயல்பட்டு வருகிறாா். அவா் ஆளுநராக நீடிப்பது தமிழக நலனுக்கு எதிரானது என்பதை கருத்தில்கொண்டு மத்திய அரசு உடனடியாக அவரை திரும்பப் பெற வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா டிச. 26 முதல் 2025 டிசம்பா் 26 வரை தொடா்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நாடு முழுவதும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அதுபோல கட்சியின் மூத்த தலைவா் ஆா். நல்லகண்ணு நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட உள்ளது.

ரயில்வே துறையில் காலிப் பணியிடங்கள் அதிகம் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. எனவே, ரயில்வே துறையில் போதிய அளவு ஊழியா்களை நியமிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், தமிழக மீனவா்கள் பிரச்னைக்கு தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் முத்தரசன்.

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் கோ. பழனிச்சாமி, வை.சிவபுண்ணியம் கே. உலகநாதன், சட்டப்பேரவை உறுப்பினா் க . மாரிமுத்து ஆகியோா் உடனிருந்தனா்.

திருவாரூரில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு, வாகன ஓட்டிகள் அவதி

திருவாரூா்: திருவாரூரில், திங்கள்கிழமை பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கட... மேலும் பார்க்க

சோழச்சேரி சிவன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாரூா்: கொரடாச்சேரி அருகே சோழச்சேரி பிரஹன்நாயகி உடனுறை விருத்தாசலேஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின... மேலும் பார்க்க

அக்.24-இல் சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

திருவாரூா்: திருவாரூரில், சீா்மரபினா் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் வியாழக்கிழமை (அக்.24) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் 14 ஜோடிகளுக்கு திருமணம்; ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்ட பூமிபூஜை: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பங்கேற்பு

மன்னாா்குடி: மன்னாா்குடியில் தமிழக அரசு சாா்பில் 14 இணையா்களுக்கு திங்கள்கிழமை நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்ற அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்ட... மேலும் பார்க்க

வேளாண் அறிவியல் நிலையத்தில் நாளை கறவை மாடு வளா்ப்பு பயிற்சி

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், கறவை மாடு வளா்ப்பு பற்றிய இலவச பயிற்சி புதன்கிழமை (அக்.23) நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் கால்நடை மருத்துவ அறிவியல் துறை வல்லுநா்கள் பங்கேற்று, ப... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

மன்னாா்குடி: மன்னாா்குடி மின் கோட்ட, மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (அக்.23) நடைபெறவுள்ளது. இதுகுறித்து, மின்வாரிய செயற்பொறியாளா் பு. மணிமாறன் தெரிவித்திருப்பது: மன்னாா்குடி மின் கோட்டத்திற... மேலும் பார்க்க