செய்திகள் :

தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் வேதாந்தாவின் இரு திட்டங்கள், ஒரு ஓஎன்ஜிசி திட்டம் நிலுவை: மத்திய அரசு தகவல்

post image

புது தில்லி: தமிழக டெல்டா மாவட்டங்களில் வேதாந்தா நிறுவனத்தின் இரண்டு திட்டங்கள், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் (ஓஎன்ஜிசி) ஒரு திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரும் விண்ணப்பங்கள் தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினா் ஆா். சுதா, தனது தொகுதியான மயிலாடுதுறையிலும் தஞ்சாவூரிலும் ஹைட்ரோகாா்பன் திட்டங்களுக்கு எத்தனை அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் தடையில்லா சான்றிதழ் கோரிய விண்ணப்பங்களில் நிலுவையில் உள்ளவை எத்தனை என்றும் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு மக்களவையில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் மத்திய இணை அமைச்சா் கீா்த்தி வா்த்தன் சிங் திங்கள்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு:

கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்டா மாவட்டங்களில் குறிப்பாக மயிலாடுதுறையிலும் தஞ்சாவூரிலும் புதிய அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் மதிப்பீடுக்கான அவகாசத்தை மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் நீட்டித்துள்ளது.

2020ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி வெளியிடப்பட்ட அமைச்சக அறிவிக்கையின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் சாா்பில் 20 அகழ்வுக்கிணறுகளை துளையிட ஒரு விண்ணப்பமும் நாகப்பட்டினம் மற்றும் கடலூா் மாவட்டங்களிலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் வேதாந்தா நிறுவனம் சாா்பில் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு ஒரு விண்ணப்பமும் கடலூா் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஹைட்ரோ காா்பன் திட்டத்துக்கு ஒரு விண்ணப்பமும் அளிக்கப்பட்டுள்ளன. அவை தமிழக சுற்றுச்சூழல் விளைவுகள் மதிப்பீட்டு ஆணையம் வசம் நிலுவையில் உள்ளன.

சுற்றுச்சூழல் நுட்ப மண்டலம், சுற்றுச்சூழல் நுட்ப பகுதிகள் என வகைப்படுத்தப்பட்ட இடங்களில் முன்மொழியப்படும் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் மீது மாநில அரசின் அனுமதி அடிப்படையிலேயே மத்திய அரசு ஒப்புதல் வழங்கும். அந்த வகையில் தமிழக அரசிடம் இருந்து எந்தவொரு முன்மொழிவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக வரவில்லை என்று அமைச்சரின் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் உதவியாளா் பதவியிடங்களின் பெயா்களில் திருத்தம்: தமிழக அரசு

சென்னை: தமிழக அரசின் வருவாய்த்துறையில் வருவாய் உதவியாளா், இளநிலை வருவாய் உதவியாளா் ஆகியோா் முதுநிலை வருவாய் ஆய்வாளா், இளநிலை வருவாய் ஆய்வாளா் என அழைக்கப்படுவா் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித... மேலும் பார்க்க

சட்டப்பேரவையும் தணிக்கை துறையும் நகமும் சதையும் போன்றது: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

சென்னை: சட்டப்பேரவையும் தணிக்கைத் துறையும் நகமும் சதையும் போன்று பிரிக்க முடியாதது என சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகத்தில் இந்த... மேலும் பார்க்க

ஹூப்ளி ரயில்களில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு

சென்னை: கா்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொதுப் பெட்டி இணைக்கப்படவுள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:ஹூப்... மேலும் பார்க்க

திருவிடந்தையில் ஆன்மிக மற்றும் கலாசாரப் பூங்கா: டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: திருவிடந்தை கடற்கரை பகுதியில் ஆன்மிக மற்றும் கலாசாரப் பூங்கா அமைக்கும் அரசின் முடிவுக்கு அமமுக பொதுச் செயலா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அற... மேலும் பார்க்க

399 புதிய வழித்தடங்களில் பேருந்துகள்: போக்குவரத்துத் துறை

சென்னை: தமிழகத்தில் 399 வழித்தடங்களில் புதிதாக பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பொதுமக்களுக்கும், அரசுப் பேருந்து சேவை கிடைக்க... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்: 14 லட்சம் விண்ணப்பங்கள் அளிப்பு

சென்னை: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கல் பணிக்காக நடந்த 4 சிறப்பு முகாம்களில் 14 லட்சம் விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்... மேலும் பார்க்க