சென்னை: இரண்டு திருமணம்; பலருடன் சாட்டிங் - திருட்டு வழக்கில் சிக்கிய அறிமுக நடி...
தமிழக பேரவைத் தேர்தல்: பொறுப்பாளர்களை நியமித்த பாஜக!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்து பாஜக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரசாரம், கூட்டணி விவகாரம், கட்சிக்கு பொறுப்பாளர்கள் நியமனம் என தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர அரசியல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பாஜக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.
அதன்படி தேர்தல் பொறுப்பாளராக பைஜெயந்த் பாண்டா நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவை எம்.பி.யான இவர் கட்சியின் தேசிய துணைத் தலைவராக இருக்கிறார்.
இணை பொறுப்பாளராக மத்திய இணையமைச்சர் முரளிதர் மொஹோல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் பாஜக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil Nadu Assembly Election Incharges appointed by BJP
இதையும் படிக்க | டிஜிட்டல் அரெஸ்ட்: வாழ்நாள் சேமிப்பான ரூ. 23 கோடியை இழந்த ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி!