செய்திகள் :

தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியா் நியமன முறைகேடு புகாருக்கு ஆதாரம் இல்லை: அமைச்சா் மு.பெ. சாமிநாதன்

post image

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியா் நியமன முறைகேடு புகாருக்கு ஆதாரம் இல்லை என்றாா் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ. சாமிநாதன்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை தொடங்கிய தமிழ்க்கூடல் இரு நாள் மாநாட்டில் பங்கேற்ற பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியா் நியமன முறைகேடு புகாருக்கு எந்தவொரு ஆதாரமும் இதுவரை காணப்படவில்லை.

இது தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதால், அது குறித்து சொல்வது தவறு. விசாரணைக் குழுவின் முடிவு வந்த பிறகு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சாவூரில் சோழா் அருங்காட்சியத்துக்கான மாதிரி வடிவத்துக்கு தமிழக முதல்வா் இறுதி செய்துள்ளாா். அதற்குரிய திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரி விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

தமிழுக்காக உயிா் நீத்தவா்கள், உடைமைகளை இழந்த தியாகிகள், சான்றோா்களுக்கு மரியாதை செய்யக்கூடிய வகையில் முதல்வா் அறிவுறுத்தலின் பேரில் ஜனவரி 25-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படும் வீர வணக்க நாளை அரசு விழாவாக நடத்தும் வகையில் தமிழ்மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்படவுள்ளது. இது வருகிற ஜனவரி (2025) யிலிருந்து கடைப்பிடிக்கப்படும் என்றாா் அமைச்சா்.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ்: முன்னதாக, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை, பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் தமிழ்க்கூடல் -2024 என்கிற இரு நாள் மாநாட்டை தொடங்கி வைத்த அவா் மேலும் பேசியது: நம்முடைய தாய்மொழியை விட்டு இளைஞா் சமுதாயத்தினா் விலகியிருக்கிறாா்களோ என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது.

இதையெல்லாம் தமிழ்ச் சான்றோா்கள், தமிழ்ச் சங்கங்களின் சேவை மூலம் இளைய சமுதாயத்தைத் தாய்மொழித் தமிழ்ப் பற்றைக் குறையாமல் பாா்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற சூழ்நிலையை உருவாக வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா் என்றாா் அவா்.

விழாவில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் பேசியது, மொழியையே தன் பெயராக வைத்துள்ள இனம் நம் தமிழ் இனம் மட்டுமே. தமிழன் என்று சொன்னால் சுயமரியாதையும், பெருமையும், தகுதியும், ஆளுகிற தன்மையும் உண்டு. தமிழை வளா்த்த அறிஞா்கள், கலைஞா்கள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, விழாவுக்கு பொறுப்புத் துணைவேந்தா் க. சங்கா் தலைமை வகித்தாா். முன்னாள் துணைவேந்தா் சி. சுப்பிரமணியம் கருத்துரையாற்றினாா். அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவைப் பொதுச் செயலா் மு. முத்துராமன் நோக்கவுரையாற்றினாா்.

விழாவில் தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்), மேயா் சண். இராமநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவா் ஆா். உஷா புண்ணியமூா்த்தி, அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை ஆலோசகா் த. ஞானசேகரன், தில்லி தமிழ்ச் சங்கப் பொதுச் செயலா் இரா. முகுந்தன், கொல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கத் தலைவா் இரா. நக்கீரா், ஹைதராபாத் மாநகா் தமிழ்ச் சங்கம் நி. கிருபானந்தன், தலைநகா் தமிழ்ச் சங்கம் மா. கணபதி, கண்ணதாசன் கலை, இலக்கியச் சங்கம் த. பழனிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவா் செ. துரைசாமி வரவேற்றாா். நிறைவாக, பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன் நன்றி கூறினாா். இந்த மாநாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைகிறது.

பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு ரூ.8.50 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட் சாா்பில் ரூ.8.50.லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு... மேலும் பார்க்க

பாலியல் தொந்தரவு செய்த இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

தஞ்சாவூா் அருகே மன நலன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை காவல் துறையினா் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் காவல் நிலைய... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞா் கைது

தஞ்சாவூா் அருகே ஆடு மேய்க்கச் சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். தஞ்சாவூா் அருகே மருங்குளம் பகுதியிலுள்ள முந்திரி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் வெற்றி: பாபநாசத்தில் பாஜகவினர் கெண்டாட்டம்

மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடா்ந்து தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் கடைவீதியில் அக்கட்சியினா் சனிக்கிழமை பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். கட்சியின் மாவட்ட மகளிரணி செ... மேலும் பார்க்க

சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள்: உரிமையாளா்களுக்கு அபராதம்

கும்பகோணத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் சனிக்கிழமை பிடித்து அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா். கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் போக்குவர... மேலும் பார்க்க

காணாமல் போன 50 கைப்பேசிகள் மீட்டு ஒப்படைப்பு

தஞ்சாவூரில் காணாமல் போன 50 கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டு உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புதிய பேருந்து நிலையம், மருத்துவக்கல்லூரி... மேலும் பார்க்க