செய்திகள் :

தலைமைச் செயலக கட்டடத்தில் விரிசலா... பதறி வெளியேறிய ஊழியர்கள்; அமைச்சர் சொல்வதென்ன?

post image

சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகைக் கட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக உள்ளிருந்த அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதறிய வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையறிந்த அமைச்சர் எ.வ. வேலு உடனடியாக தலைமைச் செயலகத்துக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எ.வ. வேலு, ``நாமக்கல் கவிஞர் மாளிகைக் கட்டடம் 1974-ல் கட்டப்பட்டது. தலைமைச் செயலகத்தின் முழு அலுவலகமும் இதில்தான் இருக்கிறது. முதல் தலத்தில் வேளாண்துறை இருக்கிறது. இங்கு திடீரென்று விரிசல் என்ற பீதி ஏற்பட்டதால் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்தவர்கள் கீழ்தளத்துக்கு வந்துவிட்டார்கள்.

கட்டடத்தின் தரைதளத்தில் போடப்பட்டிருக்கும் டைல்ஸ் 14 ஆண்டுகளுக்கு முன்பு பாடப்பட்டவை. அந்த காலத்தில் போடப்பட்ட டைல்ஸில் நாளடைவில் ஏர் கிராக் (Air Crack) ஏற்பட்டிருக்கிறது. அதைக் கட்டடத்தில் விரிசலோ என்ற அச்சத்தில் அலுவலகத்தின் வெளியேறினர். சம்பந்தப்பட்ட பொதுப் பணித்துறை தலைமைப் பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வுசெய்திருக்கின்றனர். மேலும், கட்டடம் உறுதித்தன்மையுடன் இருக்கிறது. ஏர் கிராக் ஏற்பட்டிருக்கும் டைல்ஸ்களை மாற்றி புதிய டைல்ஸ் போட சொல்லப்பட்டிருக்கிறது. நாளை அந்தப் பணிகள் தொடங்கும். எனவே, அச்சப்பட வேண்டாம். பணியாளர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு சென்றுவிட்டார்கள்" என்று விளக்கமளித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

திருவள்ளுவர் முதல் BSNL வரை... `காவி’மயமும் ‘பாரத’ பற்றும் - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு என்ன?!

திருவள்ளுவர் தொடங்கி இந்திய அணி கிரிக்கெட் ஜெர்சி, தூர்தர்ஷன் சேனல் லோகோ, ஜி-20 மாநாடு லோகோ, வந்தே பாரத் ரயில் என ஒவ்வொன்றுக்கும் காவி பெயிண்ட் அடிக்கும் கலாசாரத்தை பா.ஜ.க தொடர்ந்து செய்துகொண்டிருப்பத... மேலும் பார்க்க

Vijay : `எங்கள் தளபதிக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும்..!' - தவெக மாநாடு குறித்து S.A.சந்திரசேகர்

அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தி தனது கட்சிக் கொள்கைகளை அறிவிக்க விஜய் திட்டமிட்டிருக்கிறார்.தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மா... மேலும் பார்க்க

`தீபாவளி நேரம் பாஸ்… கண்டுக்காதீங்க!’ - லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கே `லஞ்சம்' கொடுத்த டாஸ்மாக் மேலாளர்

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தாலும், `மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அரசு எச்சரித்தாலும்,... மேலும் பார்க்க

Elon Musk vs Ambani: சாட்டிலைட் பிராட்பேண்ட் யுத்தத்தில் வெல்லப் போவது யார்?!

இந்தியாவில் பிராட்பேண்ட் சேவைக்கான செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலத்தில் விடப்படாமல் நிர்வாக ரீதியாக ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதனையடுத்து இந்தியாவில் சாட்டிலைட் பிராட்பேண்ட் ... மேலும் பார்க்க

`அடையாளமும் இல்லை… அங்கீகாரமும் இல்லை…!’ - 12 ஆண்டுகளாகப் போராடும் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள்

``2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, ` பள்ளிக்கல்வித்துறையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களாகப் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய நடவட... மேலும் பார்க்க