தவெக: ``ஆணவக்கொலை, லாக்அப் மரணம், யார் அந்த சார்?'' - திமுகவை விமர்சித்த தாடி பாலாஜி
திருவள்ளூர் மாவட்டம் குமிடிப்பூண்டிக்கு அருகில் உள்ள குமரஞ்சேரி முருகன் கோவிலுக்கு அன்னதான நிகழ்வுக்கு வந்திருந்தார் திரைக்கலைஞரும் தமிழக வெற்றிக் கழகம் ஆதரவாளருமான பாலாஜி.
அவரிடம் தூத்துக்குடி கவின் ஆணவக்கொலையில் பெண்ணின் தாயார் இதுவரையில் கைது செய்யப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் ஆணவக் கொலைகள், லாக்அப் மரணங்கள், பாலியல் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாகப் பேசியிருக்கிறார்.
விஜய் சுற்றுப்பயணம் வெற்றி பெற பூஜை
"தவெக தலைவரும் என் நண்பருமான விஜய் சுற்றுப்பயணம் வெற்றிபெற பூஜை செய்திருக்கிறேன். விஜய்க்கு வரும் கூட்டம் நிச்சயம் ஓட்டாக மாறும். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்." என்றார்.

யார் அந்த சார்?
மேலும், "இந்த 4 வருடத்தில் அவர்கள் செய்த மிகப் பெரிய சாதனையே இதுதான். ஆணவக் கொலை நடக்கிறது, காவல்நிலையங்களில் லாக்அப் மரணங்கள் நடக்கின்றன. நான்தான் இதற்காக முதலில் பேசினேன். இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு உயிர் போயிருக்கிறது, அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்க வேண்டும். இந்த ஆட்சியிலேயே மிகப் பெரிய கேள்வி யார் அந்த சார் என்பதுதானே." என்றார்.