செய்திகள் :

தாணேவில் சட்டவிரோதமாகக் குடியேறிய 9 வங்கதேசத்தினர் கைது!

post image

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் உள்ள சால் பகுதியில் சட்டவிரோதமாகக் குடியேறிய 9 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பிவாண்டியின் தாக்கூர் படா பகுதியில் புதன்கிழமை பிற்பகல் சோதனை நடத்தியபோது, 9 பேர் கொண்ட குழுவைக் கைது செய்தது. அவர்களுக்கு வீட்டை வாடகைக்கு அளித்த வீட்டு உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்ததாக கொங்கான் காவல் நிலைய துணை ஆய்வாளர் ராஜேந்தி டோங்ரே தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பயண மற்றும் தங்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகவும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டைகள் போலியாக தயாரிக்கப்பட்டு சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேலும், அவர்களிடமிருந்து ரூ.70,000 மதிப்புள்ள ஆறு மொபைல் போன்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் பாஸ்போர்ட் (இந்தியாவிற்குள் நுழைதல்) சட்டத்தின் பிரிவுகள் 336(2) (மோசடி) மற்றும் பிற தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். வீட்டு உரிமையாளரும் இணை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்தியாவிற்குள் எவ்வாறு நுழைந்தார்கள், அவர்கள் சட்டவிரோத குடியேறிகளின் வலையமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறார்களா என்பதைக் கண்டறிய மேலும் விசாரணைகள் நடந்து வருவதாக அவர் கூறினார்.

சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்க, வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை வாடகைக்கு அளிப்பதற்கு முன் தங்குபவர்களின் ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷியாவைச் சேர்ந்த 4 பேர் மீட்பு

கோவாவில் ராட்சத அலையில் சிக்கிய ரஷியாவைச் சேர்ந்த 4 பேர் பத்திரமாக மீட்டகப்பட்டனர். வடக்கு கோவாவில் உள்ள மேன்டிரம் கடற்கரையில் ரஷிய நாட்டினர் வியாழக்கிழமை பிற்பகல் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது தி... மேலும் பார்க்க

ராய்காட் கடற்கரையில் மீன்பிடி படகு தீப்பிடித்தது: 18 பணியாளர்கள் மீட்பு!

மகாராஷ்டிரம் ராய்காட் கடற்கரையில் தீப்பிடித்த மீன்பிடி படகில் இருந்த 18 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ராய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாக் அக்ஷி கடற்கரையில் சுமார் 6 - 7 கடல் மைல் தொலைவில் ராகேஷ... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்கள்!

உத்தரகண்ட்டில் ஏற்பட்டுள்ள பனிச்சரிவில் சிக்கிய 57 தொழிலாளர்களில் 16 பேர் மீட்கப்பட்டனர். உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திலுள்ள மனா என்கிற உயரமான எல்லைக் கிராமத்தில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்தப... மேலும் பார்க்க

'பெண்களின் தலை வழுக்கையானதற்கு கோதுமை காரணமல்ல' - விவசாயிகள் மறுப்பு!

மகாராஷ்டிரத்தில் புல்தானா மாவட்ட மக்களின் முடி உதிர்தல் பிரச்னைக்கு கோதுமை காரணமல்ல என்று பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் கூறியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களைச் சேர்ந... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ஐரோப்பிய ஆணையத் தலைவர் சந்திப்பு!

இந்தியா வந்துள்ள ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டர் லியனை பிரதமர் மோடி வரவேற்றார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வாண்டர் லியன் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். தேசிய தலைநகரில் உள்ள... மேலும் பார்க்க

கொல்கத்தா கொடூரம்: நடந்தது என்ன? சிறுவன் வாக்குமூலம்!

கொல்கத்தாவில், சகோதரர்களின் மனைவிகள் மற்றும் ஒரு மகள் மரணமடைந்து, சகோதரர்கள் மற்றும் ஒரு மகன் விபத்தில் படுகாயமடைந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக, சிறுவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.14 வயது பிரதீப் தே... மேலும் பார்க்க