செய்திகள் :

தாயைப் பிரிந்த சோகம்; உயிரிழந்த 9 மாத குட்டி யானை... முதுமலை முகாமில் சோகம்..!

post image

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ளது தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம். இது, ஆசியாவின் பழைமை வாய்ந்த வளர்ப்பு யானைகள் முகாம்களில் ஒன்றாகும்.

நூற்றாண்டுகளைக் கடந்து செயல்பட்டு வரும் இந்த முகாமில் தாயை பிரிந்த யானை குட்டிகள் மற்றும் எதிர்கொள்ளல்களால் சிறைபிடிக்கப்படும் காட்டு யானைகளை பராமரித்து வருகின்றனர்.

தாயுடன் சேர்ந்த யானை குட்டி

வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த முகாம், முழுக்க முழுக்க உள்ளூர் பழங்குடி மக்களைக் கொண்டே யானைகளை பராமரித்து வருகின்றனர். இங்கு, தாயைப் பிரிந்து தவிக்கும் இளம் குட்டி யானைகளை சிறந்த முறையில் பாராமரிப்பார்கள் என்பதால், அதுபோன்ற குட்டியானைகளை தெப்பக்காடு முகாமுக்கே அனுப்பி வைக்கின்றனர்.

இந்நிலையில், சத்தியமங்கலம் வனப்பகுதியில் தாயை பிரிந்து தவித்த பெண் குட்டி யானை ஒன்றை கடந்த மார்ச் மாதம் வனத்துறையினர் மீட்டுள்ளனர். அந்த குட்டியை மீண்டும் கூட்டத்துடன் இணைக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டனர். ஆனால், அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. வேறு வழியின்றி தெப்பக்காடு முகாமுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கூடுதல் கவனத்துடன் அந்த குட்டி யானையை தெப்பக்காடு முகாமில் பராமரித்து வந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தது.

குட்டியானை உயிரிழப்பு

இந்த சோகம் குறித்து தெரிவித்த வனத்துறையினர், "பிறந்து சுமார் 3 மாதமே ஆன நிலையில் தாயை பிரிந்திருக்கிறது. அப்போதிலிருந்தே மிகவும் சோர்வாகவே இருந்தது. போதுமான அளவு தாய்ப்பால் கிடைக்காததால் நலிவுற்று இருந்தது. போதுமான உடல் எடையும் இல்லை. மருத்துவர்களின் பராமரிப்பில் கூடுதல் கவனத்துடன் பராமரித்து வந்தோம். நேற்று மதியம் முதல் உடல்நிலை மிகவும் மோசமானது. சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தது. உடற்கூறாய்வு செய்து, இறுதி அஞ்சலி செலுத்தினோம் " என்றனர்.

கூடலூர்: திடீர் ஆக்ரோஷம், வனத்துறையின் ரோந்து வாகனத்தை தாக்கிய பெண் யானை... பதறிய பணியாளர்கள்!

அடர்ந்த வனப்பகுதிகளைக் கொண்டிருந்த நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காடுகளை அழித்து பெருந்தோட்டங்களாக மாற்றப்பட்டது. பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட ... மேலும் பார்க்க