செய்திகள் :

தாராவியின் கதை: `குடிசைகளை கோபுரமாக்குமா அதானி நிறுவனம்?’ மக்களின் எதிர்பார்ப்பு என்ன? | பகுதி 5

post image
மும்பை தாராவியில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் கட்டும் திட்டம் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை அதானி நிறுவனத்திடம் மாநில அரசு ஒப்படைத்தது. தற்போது அதற்கான பணிகள் அங்கு ஆரம்ப நிலையில் உள்ளது. `மினி இந்தியா’ என்று அழைக்கப்படும் `தாராவியின் கதை’யை இந்த மினித் தொடரில் காணலாம்..!

மும்பை தாராவியில் இருக்கும் குடிசைகளை இடித்துவிட்டு அடுக்குமாடிகளாக கட்டும் திட்டம் பல்வேறு காரணங்களால் தடைபட்டு வந்தது. ஒரு புறம் அரசியல் கட்சிகள் தங்களுக்கு வேண்டிய ஒப்பந்ததாரரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். மற்றொரு புறம் தாராவி மக்களுக்கு எத்தனை சதுர அடியில் வீடு கொடுப்பது என்பதில் இருந்த சர்ச்சை காரணமும் குடிசை புனரமைப்பு திட்டம் தாமதம் ஆவதற்கு முக்கிய காரணமாகும்.

ஆரம்பத்தில் மும்பையில் குடிசை புனரமைப்பு திட்டத்தில் 180 சதுர அடி வீடு மட்டுமே இலவசமாக கொடுக்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக அதனை அதிகரித்து இப்போது 325 சதுர அடி இலவச வீடுகள் கொடுக்கப்படுகிறது. அதனை அதிகரித்து 500 சதுர அடி வீடு கொடுக்கவேண்டும் என்பது தாராவி மக்களின் கோரிக்கையாக இருந்தது. இதனால்தான் பில்டர்களும் இத்திட்டத்தில் பங்கெடுக்க தயங்கிக்கொண்டே இருந்தனர்.

கே.வி.அசோக்குமார்

இறுதியாக தாராவியில் உள்ள குடிசைகளை இடித்துவிட்டு 20 ஆயிரம் கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் அதானி நிறுவனத்திடம் கடந்த 2022-ம் ஆண்டு பா.ஜ.க கூட்டணி அரசால் ஒப்படைக்கப்பட்டது. இத்திட்டத்தில் தாராவி மக்களுக்கு 350 சதுர அடி இலவச வீடுகள் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் எந்த வித இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக குடிசைகள் மேல் கட்டப்பட்டு இருக்கும் மாடிகளுக்கும் வீடு கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். அதாவது குடிசைகள் மேல் எத்தனை அடுக்குகள் கட்டி இருந்தாலும் கீழ் உள்ள வீட்டிற்கு ஒரு வீடும், மேலே இருக்கும் அடுக்குமாடிகளுக்கு ஒருவீடும் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக அதானி நிறுவனம் மாநில அரசுடன் இணைந்து கூட்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இதில் அதானி நிறுவனத்திற்கு 80 சதவீத பங்குகள் இருக்கிறது. இத்திட்டம் இப்போது முழுவேகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மாட்டுங்கா அருகே காலியாக இருக்கும் ரயில்வே நிலத்தை விலைக்கு வாங்கி அதில் தாராவி மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை அதானி நிறுவனம் கட்டத்தொடங்கி இருக்கிறது. இக்கட்டடங்கள் இரண்டு ஆண்டுக்குள் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு முதல்கட்டமாக தாராவி குடிசைவாசிகளில் குறிப்பிட்ட மக்களை இடமாற்றம் செய்துவிட்டு குடிசைகள் இருந்த இடத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட இருக்கிறது.

தாராவி

தாராவி குடிசைவாசிகளுக்கு வீடு கொடுக்கப்பட்டுவிட்டாலும், தாராவியில் இருக்கும் நூற்றுக்கணக்கான குடோன்களுக்கும், சிறிய தொழிற்சாலைகள் வைத்திருப்பவர்களுக்கும் எப்படி இடங்கள் ஒதுக்கப்படும் என்ற கேள்வி தாராவி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தாராவியில் 25 ஆண்டுகளுக்கும் மேல் தோல் பதனிடும் தொழிற்சாலை நடத்தி வந்த கே.வி.அசோக்குமார் குடும்பத்திற்கு மட்டும் ஏராளமான குடிசை வீடுகள், குடோன்கள் இருக்கிறது. இவரது வீடு மற்றும் குடோன் மட்டும் ஒரு ஏக்கர் பரப்பில் விரிந்திருக்கிறது. இது குறித்து கே.வி.அசோக்குமாரிடம் பேசிய போது, ''எங்களது நிலம் தனியார் நிலமாகும். கடைகள், சிறுதொழில்களுக்கு எங்கு கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் ஒதுக்கப்படும் என்று இதுவரை சொல்லவில்லை. எங்களிடம் இது தொடர்பாக யாரும் வந்து பேசவும் இல்லை.

எஸ்.ஏ.சுந்தர்

தொழிற்சாலைகள் அனைத்திற்கும் தனியாக ஒரு இடத்தில் இடம் கொடுக்கப்படும் என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இது வரை எங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. இப்போது அவர்கள் முக்கியமாக குடிசை வீடுகளை மட்டுமே குறிவைத்து கணக்கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்''என்றார்.

கே.வி.அசோக்குமாரின் குடோனில்தான் நடிகர் ரஜினிகாந்த்தின் காலா படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த அளவுக்கு அவருக்கு நிலம் இருக்கிறது. இதே போன்று தாராவியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் அரசியல் கட்சி பிரமுகரான எஸ்.ஏ.சுந்தர் சொந்தமாக தாராவி 90 அடி சாலையில் லாட்ஜ் நடத்தி வருகிறார். அவருக்கும் ஏராளமான வீடுகள் மற்றும் குடோன்கள் இருக்கிறது. அவரிடம் இது குறித்து கேட்டதற்கு,''இதுவரை எங்களிடம் யாரும் வந்து கணக்கெடுப்பு நடத்தவில்லை. என்னிடம் இருந்த அதிகமான வீடுகளை விற்பனை செய்துவிட்டேன். ஆனால் எங்களது குடோன்கள் குறித்து இது வரை கணக்கெடுப்பு நடத்தவில்லை. இப்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தாராவி மக்கள் தாராவியில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அவர்கள் எங்கு இருந்தாலும் நல்ல குடியிருப்பு வசதியுடன் இருக்கவேண்டும் என்பதுதான் நோக்கம். இத்திட்டத்தை அடுத்து வரும் அரசு நிறுத்தும் என்று சொல்கிறார்கள். நிச்சயமாக அப்படி நிறுத்தமுடியாது. ஏற்கனவே பணிகள் தொடங்கி நடந்து வருகிறது''என்றார்.

மும்பைக்கு 1970-களின் இறுதியில் வந்த சமூக ஆர்வலர் ஜே.ஆல்பிரட் என்பவரிடம் இது குறித்து கேட்டபோது,''தாராவி மக்களிடம் நீங்களே குடிசைகளை மேம்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லி இருந்தால் இந்நேரம் முக்கால் பகுதி குடிசைகள் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறியிருக்கும். இத்திட்டத்தை ஆரம்பத்தில் முன்னெடுத்தது காங்கிரஸ் கூட்டணி அரசுதான். ஆனால் அவர்கள் 2014ம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தனர். அவர்கள் நினைத்திருந்தால் இத்திட்டத்தை ஆரம்பத்திலேயே நிறைவேற்றி இருக்க முடியும். தாராவியில் எம்.எல்.ஏ.க்களாகவும், எம்.பி.யாகவும் இருந்த ஏக்நாத் கெய்க்வாட் மற்றும் அவரது மகள் வர்ஷா கெய்க்வாட் ஆகியோர் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தாராவி திட்டம் செயல்படுத்தப்பட்டால் மக்கள் வேறு இடத்திற்கு சென்றுவிடுவார்கள் என்ற அச்சத்தில் அவர்கள் இத்திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இழுத்தடித்தனர்.

ஜே.ஆல்பிரட்

இப்போது அதானியிடம் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் அதானியின் திட்டம் குறித்து மக்களிடம் எந்த வித விளக்கமும் கொடுக்கப்படவில்லை'' என்று குறைபட்டுக்கொண்டார்.

இதே போன்று தாராவியில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் மண்பாண்ட தொழிலாளர்களை எங்கே இடமாற்றம் செய்யப்போகிறார்கள் என்ற கேள்வியும் அவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தாராவி 90 அடி சாலையில் பிரதான பகுதியில் பல ஏக்கர் பரப்பில் மண்பாண்ட தொழிலாளர்கள் குடிசைகள் மற்றும் மண்பாண்டங்களை எரிக்கும் சூளை வைத்திருக்கின்றனர். அவர்கள் அங்கிருந்து செல்லமாட்டோம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உத்தவ் தாக்கரே தாங்கள் ஆட்சிக்கு வந்தால் தாராவி திட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறிக்கொண்டிருக்கிறார். அவரது கூட்டணியில் கெய்க்வாட் குடும்பமும் இருக்கிறது. இதனால் தாராவி திட்டம் மீண்டும் நின்றுவிடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. தற்போது நடக்கும் சட்டமன்ற தேர்தல்தான் அதற்கு விடைகொடுக்கும் என்று தாராவி மக்கள் நம்புகின்றனர்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

60 ஆண்டுகளில் முதல்முறையாக... எதிர்க்கட்சித் தலைவரைக் கொடுக்காத மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடிக்கு பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. இத்தேர்தல் முடிவுகளால் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரேயின் அரசியல் எதிர்காலம் கேள்வி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: புதிய முதல்வர் ஷிண்டேயா... பட்னாவிஸா?! - `மஹாயுதி’ கூட்டணியின் கணக்கு என்ன?

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி 231 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருக்கிறது. இதையடுத்து ஏற்கனவே இருக்கும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்வராவாரா அல்லது தேவேந்திர பட... மேலும் பார்க்க

எலான் எனும் எந்திரன் 4: `விண்வெளியும் என் வழியே..!’ | SPACE X

பேபலில் இருந்து வெளியேற்றப்படும் போதே, எலான் மஸ்குக்கு விண்வெளி மீதான காதல் அதிகரித்திருந்தது. 2001லேயே “மார்ஸ் சொசைட்டி” உடன் இணைந்து செவ்வாய் கிரகத்தில் செடி கொடிகள் வளர்வதற்கான செயற்கை அறைகளை நிறுவ... மேலும் பார்க்க

கேப்டன் தமிழ் செல்வம்: ஒரே தொகுதி... மும்பையில் 3வது முறையாக வெற்றி பெற்ற தமிழர்!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகள் இடையே இம்முறை கடுமையான போட்டி நிலவியது. 20ம் தேதி பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இ... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் டு டங்ஸ்டன் சுரங்க விவகாரம் வரை..! - நீங்க ரெடியா?

அதானி மீதான அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு, இலங்கை புதிய பிரதமர், ஹாலிவுட் விருது வென்ற ஏ.ஆர் . ரஹ்மான், அர்ஜென்டினா கால்பந்து இந்தியா வரும் அறிவிப்பு என இந்த வாரத்தில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: சறுக்கிய சரத்பவார்; பாராமதி கோட்டையைத் தக்க வைக்கும் அஜித்பவார்!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது. இப்போட்டி அதிக அளவில் மேற்கு மகாராஷ்டிராவிலிருந்தது. இதனால் இரு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளு... மேலும் பார்க்க