செய்திகள் :

மகாராஷ்டிரா: புதிய முதல்வர் ஷிண்டேயா... பட்னாவிஸா?! - `மஹாயுதி’ கூட்டணியின் கணக்கு என்ன?

post image

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான மஹாயுதி கூட்டணி 231 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருக்கிறது. இதையடுத்து ஏற்கனவே இருக்கும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே புதிய முதல்வராவாரா அல்லது தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதல்வராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து ஏக்நாத் ஷிண்டேயிடம் நிருபர்கள் கேட்டதற்கு,''மிகப்பெரிய வெற்றியை கொடுத்த மகாராஷ்டிரா மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தலில் மூன்று கட்சிகளும் இணைந்து போட்டியிட்டு இருக்கின்றன. எனவே முதல்வர் பதவி தொடர்பாக மூன்று கட்சிகளும் அமர்ந்து பேசி முடிவு செய்யப்படும்''என்று தெரிவித்தார். பா.ஜ.க சார்பாக முதல்வர் பதவிக்கு தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.

இத்தேர்தல் முடிவு குறித்து தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில்,''பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் தான் இந்த வெற்றிக்கு காரணம் ஆகும். அனைவரும் ஒருவருக்கு கீழ் இருந்தால் பாதுகாப்பு என்ற பிரதமர் மோடியின் கோஷம் எடுபட்டு இருப்பதாக” தெரிவித்தார். யார் முதல்வர் என்று தேவேந்திர பட்னாவிஸிடம் கேட்டதற்கு,'' முதல்வர் பதவி குறித்து அனைத்து கட்சிகளிடமும் கலந்து முடிவு செய்யவேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருக்கிறார்.

யார் முதல்வர் என்பதில் எங்களுக்குள் எந்த வித கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் அமர்ந்து பேசி அது பற்றி முடிவு செய்வோம். அதனை அனைவரும் ஏற்றுக்கொள்வோம்''என்றார்.

தேர்தலுக்கு முன்பு பட்னாவிஸ் அளித்திருந்த பேட்டியில், ``மகாவிகாஷ் அகாடி என்னை தங்களது சக்கர வியூகத்திற்குள் சிக்க வைத்துவிடலாம் என்று நினைக்கின்றனர்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

அது குறித்து இன்று அளித்த பேட்டியில், ''நான் நவீன அபிமன்யூ. சக்கர வியூகத்தை எப்படி உடைக்கவேண்டும் என்று எனக்கு தெரியும். நான் சக்கர வியூகத்தை உடைத்துவிட்டேன். தேர்தல் வெற்றிக்கு நான் சிறிய அளவில் பங்காற்றி இருக்கிறேன்'' என்று குறிப்பிட்டார். ஏக்நாத் ஷிண்டேயை முன்னிலைப்படுத்தியே சட்டமன்ற தேர்தலை சந்தித்து இருப்பதால் ஏக்நாத் ஷிண்டேயிக்கு முதல்வர் பதவி கொடுக்கவேண்டும் சிவசேனா(ஷிண்டே) தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால் ஏற்கனவே 131 தொகுதியில் பா.ஜ.க வெற்றி பெற்றுவிட்டது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சில வேட்பாளர்கள் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களும் சேர்ந்தால் பா.ஜ.கவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைத்துவிடும். எனவே பா.ஜ.கவை சேர்ந்தவரே முதல்வராவார் என்று தெரிகிறது.

மும்பையில் இருக்கும் தேவேந்திர பட்னாவிஸுக்கு நாக்பூரில் உள்ள அவரது தாயார் சரிதா போன் செய்து தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து பட்னாவிஸ் தாயார் சரிதா கூறுகையில், ''நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகிவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவன் கடினமாக உழைக்கக்கூடியவன்'' என்று தெரிவித்தார்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/JailMathilThigil

Bigg Boss Tamil 8: `அருண், நண்பர் என்ற முறையில் ஆதரிக்கிறேன்; நானும் மனிஷி தான்’ - அர்ச்சனா உருக்கம்

பிக் பாஸ்-7 டைட்டில் வின்னர் அர்ச்சனா. வைல்ட் கார்ட் எண்டிரியில் உள்ளே சென்று டைட்டில் வென்ற முதல் பிக்பாஸ் போட்டியாளர் என்றப் பெருமை அவருக்கு உண்டு. விஜே-வாக கரியரைத் தொடங்கியவர், சமீபத்தில் வெளியான ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: `ஷிண்டே, அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி’ - பாஜக திட்டத்தை ஏற்க மறுக்கு சிவசேனா

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக வந்திருக்கிறது. ஆட்சியமைக்க 145 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஆளும் மஹாயுதி கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிவசேனா ... மேலும் பார்க்க

IPL Mega Auction: 10 அணிகள்... நிரம்பிய வீரர்கள்... மெகா ஏலத்துக்குப் பின் `SQUAD’ விவரங்கள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்சன்ரைசர்ஸ் ஹைதராபாத்லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்பஞ்சாப் கிங்ஸ்பஞ்சாப் கிங்ஸ்டெல்லி கேபிட்டல்ஸ்டெல்லி கேபிட்டல்ஸ்ராஜஸ்தான் ராயல்ஸ்ராஜஸ்தான் ராயல்ஸ்குஜராத் டைட்டான்ஸ்குஜராத் டைட்டான்ஸ்ரா... மேலும் பார்க்க

`தோட்டத்து அம்மாவும் நானும்...' - முன்னாள் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன் பற்றி பேரன் ஷேரிங்!

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவியும் தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சருமான ஜானகி ராமச்சந்திரன் அவர்களின் நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவருடைய தம்பி வழி பேரனான வழக்கறிஞர் குமார... மேலும் பார்க்க

IPL Mega Auction: லட்சங்கள் முதல் கோடிகள் வரை ஏலம்... அணிகளிடம் எவ்வளவு பணம் மிச்சம் உள்ளது? | Day 1

IPL Mega AuctionIPL Mega AuctionIPL Mega AuctionIPL Mega AuctionIPL Mega AuctionIPL Mega AuctionIPL Mega AuctionIPL Mega AuctionIPL Mega AuctionIPL Mega AuctionIPL Mega Auction மேலும் பார்க்க

60 ஆண்டுகளில் முதல்முறையாக... எதிர்க்கட்சித் தலைவரைக் கொடுக்காத மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடிக்கு பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. இத்தேர்தல் முடிவுகளால் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரேயின் அரசியல் எதிர்காலம் கேள்வி... மேலும் பார்க்க