யுபிஎஸ்சி தேர்வு: தமிழகத்தில் 57 பேர் தேர்வு; சிவச்சந்திரன் முதலிடம்
தினமும் விமானத்தில் கல்லூரிக்குச் செல்லும் பாப் பாடகி - ஒரு நாளுக்கு எவ்வளவு செலவிடுகிறார் தெரியுமா?
தினமும் கிட்டத் தட்ட 20,000 ரூபாய் செலவு செய்து விமானத்தில் கல்லூரிக்கு சென்று வருகிறார் ஜப்பானை சேர்ந்த பாப் சிங்கர்.
பள்ளி அல்லது கல்லூரிக்கு செல்லும் பயணத்தை மாணவர்கள் தூரம், வசதி, விலைப் பொறுத்து தங்களது போக்குவரத்து முறையை தேர்வு செய்வார்கள். சிலர் டாக்ஸி, ஆட்டோக்களை தேர்வு செய்து தினமும் அதில் பயணிப்பார்கள். ஆனால் தினமும் விமானத்தை சென்று கல்லூரிக்கு செல்வதெல்லாம்... கேள்விப்படாத ஒன்றாக இருக்கிறது அல்லவா?

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் நிறுவனத்தின் செய்திக்கட்டுரையின்படி, 22 வயது ஜப்பானிய பெண் யூசுகி தினமும் கல்லூரிக்கு விமானத்தில் செல்கிறார். டோக்கியோவில் வசிக்கும் இவருக்கு அவரது பல்கலைக்கழகம் சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இவ்வளவு தூரம் இருந்த போதிலும் அந்தப் பெண் ஒரு வகுப்பைக்கூட தவறவிட்டதில்லையாம். ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் விமானப் பயணம் மேற்கொண்டு கல்லூரிக்குச் சென்று வருகிறார்.
தினமும் அவரது பயணச் செலவு தோராயமாக இந்திய மதிப்பில் 20 ஆயிரம் ரூபாயை எட்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஒருமுறை விமானத்தில் பயணிக்க 15,000 யென் (சுமார் ரூ.9,000) மற்றும் மீண்டும் பயணம் செய்ய என மொத்தம் ரூ.18,000 ஆகுமாம். தரையிறங்கிய பிறகு, அவர் தனது பல்கலைக்கழகத்தை அடைய பேருந்திலும் செல்கிறார். அவர் ஒரு பாப் பாடகி என்பதாலும் தன் விமான பயணத்தின் போது அவரின் பணிகளை முடிக்கிறார். தொழில், கல்வி என இரண்டையும் ஆர்வத்துடன் செய்யும் இவரை இணைவாசிகள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.