செய்திகள் :

திருச்செந்தூர் கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி!

post image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் முருகப் பெருமானை தரிசித்துவிட்டு கோயிலுக்குள் அமைந்துள்ள புராதன சிறப்புமிக்க பஞ்சலிங்கத்தை வழிபடுவது வழக்கம்.

இந்த நிலையில், கரோனா பொது முடக்கக் காலத்தில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை தற்போது வரை தொடர்கிறது. மேலும், பஞ்சலிங்கத்துக்கு அபிஷேகம், பூஜைகளும் நடைபெறவில்லை.

எனவே, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைந்துள்ள பஞ்சலிங்கத்துக்கு முறையாக பூஜைகள் நடத்தவும், பஞ்சலிங்கத்தை பொதுமக்கள் தரிசிக்க அனுமதிக்கவும் உத்தரவிட வேண்டும் என திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ”திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தால் கூட்டத்தை நெறிப்படுத்தலாம். இதற்காக தரிசனத்தை மறுப்பது ஏற்புடையதல்ல. பக்தா்கள் வருகை குறைவாக இருக்கும் நேரத்தில் பஞ்சலிங்க தரிசனம் அனுமதிக்கப்படுமா? என்பது குறித்து கோயில் இணை ஆணையர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்றனர்.

இந்த வழக்கு இன்று(செப். 22) விசாரணைக்கு வந்தபோது, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பஞ்சலிங்க தரிசனத்துக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வில், கோயில் நிர்வாகம் இன்று(செப். 22) பதில் மனு தாக்கல் செய்தது.

இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் பாதுகாப்புக்காக, கூட்டம் குறைவாக இருந்தால் பஞ்சலிங்க தரிசனத்துக்கு அனுமதியும், கூட்டம் அதிகமாக இருந்தால் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும் கூட்டத்தை பொறுத்து நடவடிக்கை எடுக்கக்கூறிய கோயில் நிர்வாகத்தின் முடிவை ஏற்று வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்ற அமர்வு.

இதையும் படிக்க: தில்லி புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்! காரணம் என்ன?

Devotees have been allowed to have Panchalinga Darshan at the Thiruchendur Temple.

மாணவர்கள் நலனில் அரசியல் வேண்டாம்: அன்பில் மகேஸ்

மாணவர்கள் நலனில் அரசியல் செய்ய வேண்டாம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொ... மேலும் பார்க்க

இரவில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,அடுத்த 3 மணிநேரத்துக... மேலும் பார்க்க

நெய் விலை லிட்டருக்கு ரூ. 40 குறைப்பு: ஆவின் விளக்கம்!

நெய் விலை லிட்டருக்கு ரூ. 40 குறைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பதப்... மேலும் பார்க்க

தில்லி புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்! காரணம் என்ன?

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.சேலத்தில் நேற்று(செப். 21) பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாட... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடங்கள்கூட திமுக ஊழலில் இருந்து தப்பவில்லை: அண்ணாமலை

அரசு பள்ளிக் கட்டடங்கள்கூட திமுக ஊழலில் இருந்து தப்பவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் சிங... மேலும் பார்க்க

2,417 கிராம செவிலியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: முதல்வர் ஸ்டாலின்

2,417 கிராம செவிலியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில... மேலும் பார்க்க