செய்திகள் :

திருப்தியான ஏலம்: 6ஆவது கோப்பையை வெல்வோம்..! ஆகாஷ் அம்பானி நம்பிக்கை!

post image

ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று முன் தினம் (நவம்பர் 24) தொடங்கி, நேற்றுடன் (நவம்பர் 25) நிறைவடைந்தது. இரண்டு நாள்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற ஏலத்தில் வீரர்கள் பலரும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.

மும்பை இந்தியன்ஸ்

டிரெண்ட் போல்ட் (ரூ. 12.50 கோடி), நமன் திர் (ரூ. 5.25 கோடி), ரியான் ரிக்கல்டன் (ரூ. 1 கோடி), தீபக் சாஹர் (ரூ. 9.25 கோடி), வில் ஜாக்ஸ் (ரூ. 9.25 கோடி), அல்லாஹ் கசான்ஃபர் (ரூ. 4.80 கோடி), மிட்செல் சான்ட்னர் (ரூ. 2 கோடி), ரீஸ் டாப்ளே (ரூ. 75 லட்சம்), அஷ்வனி குமார் (ரூ. 30 லட்சம்), ராஜ் அங்கத் பாவா (ரூ. 30 லட்சம்), ஸ்ரீஜித் கிருஷ்ணன் (ரூ. 30 லட்சம்), லிசாத் வில்லியம்ஸ் (ரூ. 75 லட்சம்), அர்ஜுன் டெண்டுல்கர் (ரூ. 30 லட்சம்), பெவன் ஜேக்கப்ஸ் (ரூ. 30 லட்சம்), வி.எஸ். பென்மெட்சா (ரூ. 30 லட்சம்), ராபின் மின்ஸ் (ரூ. 65 லட்சம்), கரண் சர்மா (ரூ. 50 லட்சம்)

தக்கவைப்பட்ட வீரர்கள்

ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, திலக் வர்மா.

மும்பை அணியில் வெளிநாட்டு சுழல் பந்துவீச்சாளர்களான மிட்செல் சான்ட்னர், அல்லாஹ் கசான்ஃபர் உடன் உள்நாட்டு கரன் சரண்மா இருக்கிறார்.

திருப்தியான ஏலம்

இந்த நிலையில் ஆகாஷ் அம்பானி ஜியோ சினிமாவுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அணியின் தேர்வு முழுமையான திருப்தியளித்துள்ளது. கடந்தகால மும்பை வீரர்கள் பலரை நாங்கள் இழந்துவிட்டோம். புதிய அணிக்கு தேர்வாகியுள்ள அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். நீங்கள் எப்போதும் எங்களது குடும்பத்தின் உறுப்பினர்கள்தான்.

டாப் 7 இடங்களில் ஏற்கனவே 4 பேரை தக்கவைத்திருந்தோம். சில இடங்களுக்கு மட்டுமே சரியான் ஆள்களை தேர்வு செய்ய வேண்டும். இந்தமுறை பந்துவீச்சுக்காக மட்டுமே அதிக கவனம் செலுத்தினோம். 2 நாள் ஏலத்தின் முடிவில் அதை சரியாக சாதித்ததாக நம்புகிறோம்.

போல்ட், ரீஸ் டாப்லி இருவரும் இடதுகை வேகப் பந்துவீச்சாளர்கள் என்பது முக்கியம். போல்ட் முன்பே எங்களது அணியில் விளையாடியிருக்கிறார். புதிய பந்தில் ஸ்விங் ஏற்படுத்தி விக்கெட் எடுப்பதில் திறமையானவர். கடந்த சில சீசன்களில் எங்கள் அணியில் இல்லாதது சற்று வருத்தமளித்தது.

இனிமேல் விமர்சனங்கள் இருக்காது

எப்போதும் ஏலத்துக்குப் பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியில் நல்ல ஸ்பின்னர்கள் இல்லை என்ற விமர்சனத்தைப் பார்ப்பேன். எங்களுக்கும் இந்திய சுழல் பந்துவீச்சாளர்களை பிடிக்கும். ஆனால், அவர்கள் அதிக விலைக்கு செல்வார்கள். குறிப்பிட்ட சில இடங்களில் சில அணிக்கு எதிராக மிட்செல் சான்ட்னர், அல்லாஹ் குஜான்ஃபர் உடன் விளையாடுவோம்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 6ஆவது கோப்பை வேண்டும். எப்போதை விடவும் இப்போது மிகவும் தேவைப்படுகிறது. நாங்கள் 6ஆவது முறையாக கோப்பையை வெல்வது முதல்முறை கோப்பையை வெல்வதற்கு சமம். கோப்பையை வென்று நீண்ட நாள்கள் ஆகின்றன. அடுத்த சீசனில் கோப்பையை வெல்வோம் என்றார்.

முதல் டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி மே.இ.தீவுகள் அபார வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றி பெற்றுள்ளது.மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் வங்கதேசத்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் நடைபெற்றது. இந்தப்... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: பிளேயிங் லெவனை அறிவித்த தென்னாப்பிரிக்க அணி!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை தென்னாப்பிரிக்க அணி அறிவித்துள்ளது.இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இர... மேலும் பார்க்க

அணியில் மாற்றமில்லை..!லபுஷேன் மீண்டு வருவார்! ஆஸி. தலைமைப் பயிற்சியாளர் பேட்டி!

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான முதல் பார்டர் - கவாஸ்கர் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2ஆவது டெஸ்ட் டிச.6ஆம் தேதி தொடங்குகிறது. இந்திய அணியில் ரோஹித், கில் இடம்பெறுவார்கள். அவர்... மேலும் பார்க்க

அவசரமாக இந்தியாவுக்கு திரும்பிய கௌதம் கம்பீர்; காரணம் என்ன?

தனிப்பட்ட அவசர காரணங்களுக்காக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தாயகம் திரும்பியுள்ளார்.இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் ... மேலும் பார்க்க

53 பந்துகளில் சைம் அயூப் அதிரடி சதம்! தொடரை சமன் செய்தது பாக்!

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமன்செய்தது பாகிஸ்தான் அணி.ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ஜிம்பாப்வேயின் புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட... மேலும் பார்க்க

சோகமாக இருக்கிறது, மீண்டும் ஒன்றிணைவோம்; ரிஷப் பந்த் குறித்து தில்லி கேபிடல்ஸ் உரிமையாளர்!

தில்லி கேபிடல்ஸ் அணியில் இருந்து ரிஷப் பந்த் பிரிவதை பார்ப்பதற்கு மிகவும் சோகமாக இருக்கிறது என அந்த அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பார்த் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் விறு... மேலும் பார்க்க