செய்திகள் :

தில்லி தேர்தல்: அரவிந்த் கேஜரிவால் தோல்வி!

post image

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தோல்வி அடைந்துள்ளார்.

70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு பிப். 5ல் நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை (பிப்.8) காலை 8 மணிக்குத் தொடங்கியது. மொத்தம் 13 சுற்றுகளாகத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டது.

இந்த நிலையில், பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தோல்வியைத் தழுவியுள்ளார்.

பாஜகவின் பர்வேஷ் வர்மாவிடம் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் கேஜரிவால் தோல்வியடைந்தார். பர்வேஷ் 30,088 வாக்குகள், ஆம் ஆத்மி அரவிந்த் கேஜரிவால் 25,999 வாக்குகள் பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட தில்லி முதல்வர் அதிஷி 52,154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரியை முன்னிலை வகித்து வந்த நிலையில் இறுதிச் சுற்றுகளின்போது பின்னடைவைச் சந்தித்துத் தோல்வியடைந்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் முன்னிலை பெற்ற நிலையில், பாஜக வெற்றி பெற்றதாகவும், ஆத் ஆத்மி கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி கண்டோன்மென்ட் மற்றும் கோண்ட்லி ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ் ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெறாதது துரதிருஷ்டவசமானது.

தேசிய தலைநகரில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது. பாஜக ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டத்தை ஒரு பண்டிகையை போன்ற கொண்டாடி வருகின்றனர். நாடு முழுவதிலும் உள்ள பாஜக கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தில்லி வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர் மோடி

தில்லி பேரவைத் தேர்தல் வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தில்லியில் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் அவர் பே... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவரின் பெற்றோரை சந்தித்த மோகன் பாகவத்

கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோரை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சனிக்கிழமை சந்தித்தார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ராஜஸ்தான், மத்தியப் பிரதேச முதல்வர்கள் புனித நீராடல்

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் ஆகியோர் சனிக்கிழமை திரிவேணி சங்கமத்தில் நீராடினர்.அப்போது மகா கும்பமேளா ஏற்பாடுக... மேலும் பார்க்க

நல்லாட்சிக்குக் கிடைத்த மகத்தான வெற்றி: பிரதமர் மோடி!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் பாஜக அமோக வெற்றி பெற்றதையடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அளித்த தில்லி மக்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். 70 தொ... மேலும் பார்க்க

மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்: தில்லி தோல்வி குறித்து கேஜரிவால்

தில்லி பேரவைத் தேர்தல் குறித்து ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், தில்லிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. மக்களின் தீ... மேலும் பார்க்க

உ.பி. இடைத்தேர்தலில் வெற்றியை உறுதிசெய்த பாஜக!

உத்தரப் பிரதேசத்தில் மில்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.தில்லி பேரவைத் தேர்தல், தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்த... மேலும் பார்க்க