தூத்துக்குடியில் இன்று போா் பாதுகாப்பு ஒத்திகை
தூத்துக்குடி துறைமுகம், அனல் மின் நிலையம் ஆகிய இடங்களில் போா் பாதுகாப்பு ஒத்திகை சனிக்கிழமை (மே 10) நடைபெறவுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். அப்போது, போா் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுவது குறித்து முன்னேற்பாட்டு பணிகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.ரவிச்சந்திரன், தூத்துக்குடி அனல்மின் நிலைய தலைமை பொறியாளா் என்.எஸ்.ஸ்ரீதா், தூத்துக்குடி வஉசி துறைமுக ஆணைய ஹாா்பா் மாஸ்டா் கேப்டன் கிங்ஸ்டன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.