Aus vs Ind : 'குறுக்கிட்ட மழை; முதல் போட்டியிலேயே தோற்ற இந்திய அணி!' - என்ன நடந்...
Aus vs Ind : 'குறுக்கிட்ட மழை; முதல் போட்டியிலேயே தோற்ற இந்திய அணி!' - என்ன நடந்தது?
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. மூன்று ஓடிஐ போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் ஆடவிருக்கிறது. இதில், முதல் ஓடிஐ போட்டி இன்று பெர்த்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக ஆடி தோற்றிருக்கிறது.

இந்தப் போட்டிக்கான டாஸை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் வென்றிருந்தார். முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். இந்திய அணியின் சீனியர்களான ரோஹித்தும் கோலியும் 6 மாதங்களுக்குப் பிறகு கம்பேக் கொடுத்ததால் போட்டியின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால், இருவருமே எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஆடவில்லை.
ரோஹித் 8 ரன்களில் ஹேசல்வுட்டின் பந்தில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆக, கோலி ஸ்டார்க்கின் பந்தில் ஆப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற டெலிவரியில் பேட்டை விட்டு டக் அவுட் ஆனார். பவர்ப்ளேக்குள்ளாகவே ரோஹித், கோலி, கில் என மூன்று பேரின் விக்கெட்டையும் ஆஸ்திரேலிய பௌலர்கள் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய பௌலர்கள் இந்திய அணியின் டாப் ஆர்டர் மொத்தத்தையும் வீழ்த்த, இந்திய அணிக்கு மொமண்டமே கிடைக்கவில்லை. இடையே நான்கைந்து முறை மழையும் குறுக்கிட்டு ஆட்டத்தை சோதித்தது. இதனால் ஆட்டமும் 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

மிடில் ஆர்டரில் அக்சர் படேலும் கே.எல்.ராகுலும் மட்டுமே ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர். அக்சர் படேல் 31 ரன்களையும் கே.எல்.ராகுல் 38 ரன்களையும் அடித்து ஆட்டமிழந்தனர். கடைசி வரை இந்திய அணிக்கு மொமண்டமே கிடைக்கவில்லை. இதனால் இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸை முடித்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு 137 ரன்கள் டார்கெட். ஹெட்டும் மிட்செல் மார்ஷூம் ஓப்பனிங் இறங்கினர். இந்திய அணி சீக்கிரமே இந்த ஓப்பனிங் கூட்டணியை உடைத்தது. ஹெட்டை அர்ஷ்தீப் சிங் 8 ரன்களில் வீழ்த்தினார். நம்பர் 3 இல் வந்த ஷார்ட்டும் 8 ரன்களில் அக்சர் படேலின் பந்தில் வீழ்ந்தார். ஆனாலும் டார்கெட் சிறியது என்பதால் ஆஸ்திரேலியாவுக்கு பெரிதாக அழுத்தம் ஏறவில்லை. மார்ஷ் 46 ரன்களையும் பிலிப்பே 37 ரன்களையும் எடுக்க 21.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 131 ரன்களை எடுத்தது. அந்த சமயத்தில் மழை குறுக்கிடவே DLS முறைப்படி ஆஸ்திரேலிய அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி இந்தத் தொடரில் 1-0 என முன்னிலைப் பெற்றிருக்கிறது.