`வெறுப்பு அரசியலை வென்ற ஹாக்கி' - Hi-Fi செய்து கொண்ட இந்தியா - பாகிஸ்தான் வீரர்க...
AK Racing: "ஆர்வமும் அடக்கமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம்" - அஜித்தின் ரேஸிங் அனுபவம்!
நடிகர் அஜித் குமார் தனது முழு கவனத்தையும் கார் ரேஸில் செலுத்தி வருகிறார். அஜித் குமார் ரேஸிங் நிறுவனத்தை தொடங்கி, அதைப் பல்வேறு உலக நாடுகளின் கார் பந்தயப் போட்டிகளிலும் பங்கெடுக்கச் செய்துவருகிறார்.
கடந்த ஜூன் மாதம் பெல்ஜியமில் நடந்த கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில் அஜித்குமார் கார் ரேஸ் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியது.
சமீபத்தில் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா ரேஸ் டிராக்கில் நடைபெற்ற உலகளாவிய கார் பந்தயத்தில், அஜித் குமார் தலைமையிலான டீம் மூன்றாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இதுவரை பங்கேற்ற போட்டிகளும், அதன் சாதனைகளும் குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் அஜித்;
பயிற்சியிலிருந்து பேரறிவுக்குப் பயணம்
2025 ஆம் ஆண்டின் ரேசிங் சீசன், அஜித் குமார் ரேசிங் குழுவுக்கு வெறும் போட்டியல்ல - அது ஒரு கற்றல் பயணம். ஒவ்வொரு சுற்றிலும் சவால்கள், தோல்விகள், வெற்றிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு புதிய இந்திய அணியின் ஆற்றலை உலக ரேசிங் மேடையில் வெளிப்படுத்திய ஆண்டு இது. துபாயின் வெப்பமான பாலைவனத்திலிருந்து வட ஐரோப்பாவின் பனி மூட்டம் சூழ்ந்த காலையில்வரை ஒவ்வொரு ரேஸும் இந்த அணியை புதிதாக வடிவமைத்தது.
2024 அக்டோபரில் பார்சிலோனாவில் நடைபெற்ற 'Porsche Cup' சோதனைகளுடன் தொடங்கிய பயணம், சரியாக பன்னிரண்டு மாதங்களுக்குப் பிறகு அதே சுற்றுப்பாதையில் நிறைவடைந்தது.
புதிய அணி என்ற வகையில் 'Ajith Kumar Racin'g சவால்களை எதிர்கொண்டது. சக்திவாய்ந்ததும் சிக்கலானதுமான 'Porsche 992 GT3 Cup' காரை ஓட்டுவது வெறும் வேகத்தால் மட்டுமல்ல அதற்கேற்ப மரியாதை, துல்லியம், அனுபவம் ஆகியவற்றையும் தேவைப்படுத்தியது. முகெல்லோ, ஸ்பா, பால் ரிக்கார்ட், மிசானோ போன்ற ஒவ்வொரு சர்வதேச சுற்றுப்பாதையும் குழுவுக்கே ஒரு புதிய பாடமாக அமைந்தது.

அஜித் குமார் ரேசிங் அணி 2025 ஆம் ஆண்டில் பின்வரும் முக்கிய சாம்பியன்ஷிப்களில் பங்கேற்றது:
24H Middle East Trophy – Porsche Cup
24H European Series – Porsche Cup: மொத்தப் போட்டியில் பட்டியலில் மூன்றாம் இடம்
Porsche Sprint Challenge Southern Europe – Porsche Cup
GT4 European Series
முக்கிய முடிவுகள்:
துபாய் (ஜனவரி 2025) – மூன்றாம் இடம்
முகெல்லோ (மார்ச் 2025) - மூன்றாம் இடம்
ஸ்பா-ப்ராங்கோர்சாம்ப் (ஏப்ரல் 2025) – இரண்டாம் இடம்
போர்டிமாவ், எஸ்டோரில், வாலென்சியா, பார்சிலோனா, மிசானோ, பால் ரிக்கார்ட் போன்ற சுற்றுகளில் சிறந்த செயல்திறன்.
GT4 European Series – Porsche GT4
பால் ரிக்கார்ட் (ஏப்ரல் 2025)
சாண்ட்வூர்ட் (மே 2025)
ஸ்பா (ஜூன் 2025)
மிசானோ (ஜூலை 2025)
நூர்புர்க்ரிங் (ஆகஸ்ட் 2025)
பார்சிலோனா (அக்டோபர் 2025)
ஒவ்வொரு ரேஸ் நாளின் பின்னாலும் எண்ணற்ற மணி நேர உழைப்பு, பொறுமை, சோர்வற்ற மனநிலை இருந்தது.
மெக்கானிக்குகள், இன்ஜினீயர்கள் இரவெங்கும் இயந்திரங்களை சரிசெய்தனர். ஓட்டுநர்கள் மழை, குளிர், வெப்பம் அனைத்திலும் தங்களின் எல்லைகளைத் தாண்டினர். தோல்விகளும், தொழில்நுட்ப கோளாறுகளும், தவறிய வாய்ப்புகளும் இருந்தன.
ஆனால், ஒவ்வொரு தோல்வியும் ஒரு புதிய பாடமாக மாறியது. ஒவ்வொரு சுற்றும் - வெற்றி அல்லது தோல்வி - அணியின் வளர்ச்சிக்கும் அனுபவத்துக்கும் அடித்தளமாக அமைந்தது.

இந்த சீசன், போட்டிகளைத் தவிர மனித உறவுகளையும் கட்டியெழுப்பியது. பல சர்வதேச அணிகளும், அமைப்புகளும், ஒரே ஆர்வம் கொண்ட நபர்களும் AKR அணியுடன் இணைந்தனர்.
பல சர்வதேச தொடர்ச்சியான ரேஸிங் தொடர்களில் முழுமையாக பங்கேற்ற முதல் இந்திய அணி,
சர்வதேச போடியம் வெற்றி, மற்றும் உலக தரத்திலான திட்டமிடல் மற்றும் குழு ஒருங்கிணைப்பு அனுபவம்.
இந்தப் பயணத்துக்கு துணை நின்ற ஒவ்வொருவருக்கும் இதயபூர்வ நன்றியைத் தெரிவிக்கிறது:
Series Organisers: Creventic, Prospeed, SRO சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் ஆதரவுக்காக.
Partner Teams: Redant Racing, AV Racing – தொழில்நுட்ப ஒத்துழைப்புக்காக.
Team Members: புதியவர்களும் பழையவர்களும் — உழைப்புக்காக.
Fans & Supporters: ஒவ்வொரு ரேஸிலும், ஒவ்வொரு பதிவிலும் அன்பு, ஊக்கம், நம்பிக்கை வழங்கியதற்காக.
Support Staff: பின்னணியில் உழைத்து ஒவ்வொரு ரேஸையும் சாத்தியமாக்கிய தொழில்நுட்ப பணியாளர்கள்.
முதல் சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், அஜித் குமார் ரேஸிங் அணி இப்போது வெற்றி பெற்ற அணியாக மட்டுமல்ல, அனுபவத்தால் செழித்த அணியாகவும் திகழ்கிறது.
'Porsche Cup' மற்றும் 'GT4' போட்டிகளில் பெற்ற அனுபவம், எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.
அணி தற்போது தொடர்ந்து சோதனைகள், புதிய திட்டமிடல், மற்றும் சர்வதேச ரேஸிங் துறையில் தன் தடத்தை விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்துகிறது.
இந்த பயணம் எங்களின் கடின உழைப்பும் தாழ்மையும் சேர்ந்த விளைவு. இதுவரை கற்றதையெல்லாம் அடுத்த கட்டப் பயணத்தில் இன்னும் சிறப்பாக பயன்படுத்துவோம்." என்று கூறியிருக்கிறார் அஜித் குமார் மற்றும் 'Ajith Kumar Racing' அணி