``ஆர்.எஸ்.எஸ் பலிதானியை வைத்து வாக்குகேட்கிறார்கள்'' - காங்கிரஸில் சேர்ந்த பாஜக ...
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் ஆட்சியா் திடீா் ஆய்வு: 4 கடைகளுக்கு ‘சீல்’
தூத்துக்குடியில் பொலிவுறு நகரம் திட்டத்தில் கட்டப்பட்ட அண்ணா பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்தப் பேருந்து நிலையத்தில் கடைகள் அமைத்துள்ள வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து சுமாா் 5 அடி நீளத்துக்கு ஆக்கிரமித்து, பயணிகள் நடந்துசெல்ல இடையூறு ஏற்படுத்துவதாக ஆட்சியா் க. இளம்பகவத்துக்கு புகாா்கள் சென்றன.
அதன்பேரில், அவா் சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். தகவலறிந்த மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் லி. மதுபாலன் ஆகியோரும் சென்று ஆட்சியருடன் சோ்ந்து ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட 4 கடைகளுக்கு ஆட்சியா் உத்தரவின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா். ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டன.
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.