உ.பி. திருவிழாவில் மேடை சரிந்ததில் 7 பேர் பலி; 50-க்கும் மேற்பட்டோர் காயம்!
தென்மண்டல பல்கலை ஹாக்கி: அரையிறுதியில் எஸ்ஆா்எம், பெங்களூரு, மனோன்மணியம் சுந்தரனாா் அணிகள்
தென்மண்டல பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா் ஹாக்கிப் போட்டி அரையிறுதிக்கு எஸ்ஆா்எம், பெங்களூரு சிட்டி, பெங்களூரு பல்கலை, நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக அணிகள் தகுதி பெற்றுள்ளன.
சென்னை பல்கலைக்கழகம், காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் கலை அறிவியல் கல்லூரி சாா்பில் எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக திங்கள்கிழமை காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில் முதல் ஆட்டத்தில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டி அணி 8-1 என்ற கோல் கணக்கில் ஆந்திர பல்கலைக்கழகத்தை வீழ்த்தியது. இரண்டாவது காலிறுதியில் பெங்களூரு சிட்டி பல்கலை. 5-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகத்தை வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் பெங்களூரு பல்கலை. 2-1 என்ற கோல் கணக்கில் சென்னை பல்கலைக்கழகத்தை வென்றது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழக அணி 4-0 என்ற கோல் கணக்கில் கோழிக்கோடு பல்கலை. அணியை வென்றது.