சேலத்தில் களைகட்டும் தீபாவளி பர்சேஸ்; புத்தாடை, பட்டாசுகள் வாங்க பொதுமக்கள் ஆர்வ...
தெலங்கானா முழுவதும் பந்த்; இட ஒதுக்கீடு கோரிக்கைக்காக ஒருங்கிணைந்த போராட்டம்; பின்னணி என்ன?
தெலங்கானா மாநிலத்தில் அக்டோபர் 18ம் தேதியான (இன்று) மாநிலம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தெலங்கானா மாநில அரசு பிறபடுத்தப்பட்ட பிரிவினருக்கு (BC) 42% இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணை பிறப்பித்திருந்தது. இந்தப் புதிய ஒதுக்கீட்டால் BC, SC, ST உள்ளிட்ட அனைத்து பிரிவினர்களின் இட ஒதுக்கீடுகள் மொத்தம் 67% ஆகிறது. ஆனால், இந்திய அரசியல் சட்டத்தின் படி, இட ஒதுக்கீடுகள் 50%யை தாண்டக் கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய திடீர் தாக்குதல்; 3 கிரிக்கெட் வீரர்கள் பலி; என்ன நடந்தது?
இதன் அடிப்படையில் தெலங்கானா மாநில அரசு பிறப்பித்த பிற்படுத்தப்பட்டோருக்கான 42% இட ஒதுக்கீட்டிற்குத் தற்காலிக தடை விதித்திருக்கிறது தெலங்கானா உயர் நீதிமன்றம். உள்ளாட்சித் தேர்தல்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் அரசு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று தெலங்கானா மாநிலம் முழுவதும் பந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பந்த்திற்கு 'BC JAC' கூட்டமைப்பு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அம்மாநில துணை முதல்வர் மல்லு பாட்டி விக்ரமார்க்கா, பொது மக்களும் அனைத்து சமூகம் சார்ந்தவர்களும் பந்த்-இல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த பந்த்தில் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள், நாடகம், பேருந்து போக்குவரத்து உள்ளிட்டவை மூடப்பட்டிருக்கின்றன. RTC பேருந்துகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன.
மருந்தகங்கள், மருத்துவனமனைகள் போன்ற அத்யாவசிய சேவைகள் மட்டும் இயங்கி வருகின்றன. தீபாவளி பண்டிகை சமயத்தில் இதுபோன்ற பந்த் பலருக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம், இருப்பினும் இட ஒதுக்கீடுதான் முக்கியம் என மாநிலம் முழுவதும் பந்த் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், அக்டோபர் 23 ஆம் தேதி நடைபெறும் தெலங்கானா அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த 42 சதவீத ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது