செய்திகள் :

'தேர்தல் தோல்வி... பிரதமரிடம் இருந்து வந்த அழைப்பு..' - மனம் திறந்த சி.பி.ராதாகிருஷ்ணன்

post image

சி.பி. ராதாகிருஷ்ணன் நாட்டின் குடியரசு துணைத் தலைவராகப் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று தமிழ்நாடு வந்தார். இன்று காலை கோவை வந்த அவருக்கு தொழில் அமைப்புகள் சார்பில் கொடிசியா அரங்கில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கோவையின் முக்கிய தொழிலதிபர்கள், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், ஹெச்.ராஜா, அண்ணாமலை, வானதி சீனிவாசன்,

சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டு விழா

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அக்கட்சி எம்எல்ஏக்கள், திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், " நான் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றதும் முதலில் சென்னை வருவதுதான் திட்டம். மாநிலத்தின் தலைநகருக்கு வருவதுதான் மரபு. அதே தேதியில் செசல்ஸ் நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்கு செல்லுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

சி.பி.ராதாகிருஷ்ணன்

அதனால் திட்டம் மாறி கோவை மண் என்னை இழுத்து வந்ததாகக் கருதுகிறேன். இந்த மண்ணிலிருந்துதான் என் பொதுவாழ்க்கை தொடங்கியது. இங்கு பலரும் பலதரப்பட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். உங்களில் ஒருவனாக எல்லாவற்றுக்கும் உறுதுணையாக இருப்பேன்.

நான் எம்பியாக இருந்தபோது, என்டிசி தொழிலாளர்களின் போனஸ் பிரச்னை இருந்தது. நாங்கள் முயற்சிசெய்து அந்தப் பிரச்னைக்குத் தீர்வை எட்டினோம். யாரையும் அதிகம் பாராட்டாத சிஐடியூ தொழிற்சங்க தலைவர் நஞ்சப்பன் என்னை பாராட்டி வாழ்த்தினார். நான் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தபோது, மோடி என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசினார்.

சி.பி. ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சி
சி.பி.ராதாகிருஷ்ணனுடன் வேலுமணி

ஒரு சில நாட்களில் என்னை ஜார்க்கன்ட் ஆளுநராக நியமித்தனர். வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் அதை ஒரு மனதோடு ஏற்பவர்களுக்குத்தான் வெற்றி அதிகம் கிடைக்கும். முயற்சி நம் கையில் இருந்தாலும், முடிவு இறைவன் கையில்உள்ளது. தர்மமும், உண்மையும் நம்மிடம் இருந்தால் எல்லாமே சாத்தியம்.” என்றார்.

மும்பை: மாநகராட்சி தேர்தல்; `சுயமாக முடிவெடுக்கலாம்!’ - காங்கிரஸை கைகழுவ தயாராகும் உத்தவ்?

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் ஜனவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி வார்டுகள் குலுக்கல் முறையில் எது பெண்களுக்கானது என்பத... மேலும் பார்க்க

Mexico: அதிபர் மீது அதிருப்தி; மெக்சிகோவிலும் வெடித்த Gen Z போராட்டம் - ஏன், என்ன நடந்தது?

இந்தோனேசியா, வங்கதேசம், மடகாஸ்கர் மற்றும் நேபாளத்தில் ஆளும் அரசாங்கத்தின் பல்வேறு நிர்வாகக் கோளாறுகளை எதிர்த்து மிகப் பெரிய 'ஜென் Z' போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாடுக... மேலும் பார்க்க

Pa.Ranjith:``கம்யூனிஸ்ட்டுகள் ஏன் அம்பேத்கரை வாசிக்கவில்லை?" - பா.ரஞ்சித் முன்வைக்கும் குற்றச்சாட்டு

நீலம் பண்பாட்டு மையம் சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2025-ம் ஆண்டுக்கான அறிஞர் ராஜ் கெளதமன் நினைவு விருது ஆய்வாளர், எழுத்தாளர் வ.கீதா அவர்... மேலும் பார்க்க

தாசில்தாரைக் கடித்த வெறிநாய்கள்; களத்தில் இறங்கிய கலெக்டர்; அலுவலர்களுக்கு நோட்டீஸ்

தாசில்தார் ஒருவரை வெறி நாய் கடித்த சம்பவத்தால் கலெக்டரே களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.மேசியதாஸ்சிவகங்கையில் வசிக்கும் மாவட்ட தேர... மேலும் பார்க்க

கேரளா: `என்னுடைய மகன் மன அழுத்தத்தில் இருந்தான்' - SIR பணிச்சுமையால் BLO அதிகாரி தற்கொலை

பிகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை, நாட்டின் பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்திருக்கிறது.அதன்படி, அடுத்த ஆண... மேலும் பார்க்க