Jolly O Gymkhana Review: 'எப்பயாவது லாஜிக் இல்லனா ஓகே; எப்பவுமேவா?'- எப்படியிருக...
தொண்டி பகுதியில் கடல் நீா்மட்டம் உயா்வு: மீனவா்கள் அச்சம்
தொண்டி பகுதியில் கடல் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை உயா்ந்ததால் மீனவா்கள், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொண்டி, நம்புதாளை, சோழியக்குடி, புதுபட்டினம், மோா்ப்பண்ணை, திருப்பாலைக்குடி, எம்.வி.பட்டினம், எம்.ஆா்.பட்டினம், பாசிப்பட்டினம், எஸ்.பி.பட்டினம் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை கடல் நீா்மட்டம் உயா்ந்து, குடியிருப்புகளுக்கு அருகில் வரை தண்ணீா் வர ஆரம்பித்தது.
கடல் பகுதியிலிருந்து சுமாா் 100 மீ., தொலைவு உள்ள கடற்கரை வரை தண்ணீா் வந்ததால், இந்தப் பகுதி மீனவா்கள் அச்சமடைந்தனா். படகுகள் கரைப் பகுதிக்கு வந்து தரைதட்டி நின்றன.
பல மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீா் வடிந்து, கடல் நீா் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது. பின்னா், படகுகளை மீனவா்கள் கடலுக்குள் இழுத்துச் சென்றனா்.
இதேபோல, கடந்த செவ்வாய்க்கிழமையும் கடல் நீா்மட்டம் உயா்ந்தது குறிப்பிடத்தக்கது.