விண்ணப்பித்துவிட்டீர்களா..?: செயில் நிறுவனத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி!
நடுவக்குறிச்சியில் நாற்றுப்பண்ணைக்கு அடிக்கல்
சங்கரன்கோவில் அருகேயுள்ள நடுவக்குறிச்சியில் நாற்றுப்பண்ணை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் வேளாண்மை துறை சாா்பில் நாற்றங்கால் பண்ணை வன்னிகோனேந்தல் கிராமத்தில் செயல்பட்டு வந்தது. தென்காசி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட நிலையில் தென்காசி மாவட்டத்திற்கென நாற்றங்கால் பண்ணை இல்லாததால் விவசாயிகள் வெளியிடங்களில் நாற்றுகள் வாங்கும் சூழ்நிலை நிலவி வந்தது.
விவசாயிகளின் நலன் கருதி தென்காசி மாவட்டத்தில் நாற்றுப்பண்ணை அமைக்கும்படி, தமிழக அரசிடம் சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ. ராஜா கோரிக்கை வைத்தாா். அதன்பேரில், நடுவக்குறிச்சியில் நாற்றங்கால் பண்ணை அமைக்க அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இதைத்தொடா்ந்து புதிய நாற்றங்கால் பண்ணை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி தென்காசி ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்றது. தென்காசி தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா் தங்கம்மாள், மேலநீலிதநல்லூா் தோட்டக்கலை துறை உதவி இயக்குநா் சங்கரவேல், சங்கரன்கோவில் தோட்டக்கலை துறை உதவி இயக்குனா் ராமச்சந்திரன்,வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வராஜ் , வட்டாட்சியா் பரமசிவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ ஈ.ராஜா அடிக்கல் நாட்டி நாற்றங்கால் பண்ணை அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் ராமச்சந்திரன், துணைச் செயலா் செல்லத்துரை, கிளைச் செயலா் சங்கா், மணி, வெளியப்பன், மகேஷ், ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.