செய்திகள் :

நண்டு தெரியும்; தில்லை நண்டுகள் தெரியுமா உங்களுக்கு?

post image

தில்லை நண்டுகள் தெரியுமா உங்களுக்கு? இந்த நண்டுகள் எங்கு வசிக்கும்? இவற்றுக்கு ஏன் தில்லை நண்டுகள் என்று பெயர் வந்தது?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரிந்துகொள்வதற்கு முன்னால், பொதுவாக ’பத்துக்காலி’களான நண்டுகளைப் பற்றிய சில தகவல்களை காட்டுயிர் ஆர்வலரும், சூழலியல் எழுத்தாளருமான கோவை சதாசிவம் அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வோமா?

நண்டு
நண்டு

''நம் எல்லோருக்குமே கடல் பார்க்கப் பிடிக்கும். அதற்காக கடற்கரை செல்லவும் பிடிக்கும். கண் எதிரே இருக்கிற பிரம்மாண்டமான கடலைப் பார்க்கிற நாம், எப்போதாவது நம் கால்களின் கீழே இருக்கிற மணலில் நண்டுகளின் காலடித் தடங்களைப் பார்த்திருக்கிறோமா..?

அந்தச் சின்னஞ்சிறிய கோடுகள் எல்லாம் கடற்கரை மணலில் நண்டுகள் வரைந்து வைத்த ஓவியங்கள்... கடற்கரை மணலுக்குள் ஒளிந்து விளையாடும் சிறு சிறு நண்டுகளில் ஆரம்பித்து வெவ்வேறு அளவுகளில், கடல் நண்டு, சதுப்பு நில நண்டு, வயல் நண்டு என உப்புக்கடலில் ஆரம்பித்து நன்னீர் வரைக்கும் உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான நண்டுகள் வாழ்கின்றன. நீரிலும் நிலத்திலும் சுவாசிக்க முடிந்த நுரையீரல்களைக்கொண்டவை நண்டுகள்.

கடலில், கிட்டத்தட்ட10 ஆயிரம் அடி ஆழத்தில்கூட, நண்டுகள் வாழ்கின்றன என்பது ஒரு வியப்பான தகவல். சரி, அத்தனை அடி ஆழத்தில் நண்டுகள் என்ன செய்கின்றன; இந்த உயிர்ச்சூழலில் நண்டுகளின் பங்கு என்னவென்று பார்த்தால், கடல் வாழ் நண்டுகள் கடல் நீரின் துப்புரவாளர்களாக இருக்கின்றன. பெரிய மீன்கள் உண்ட மிச்சம் மீதி தசைத்துணுக்குகளை நண்டுகள் சாப்பிட்டு கடலைத் தூய்மையாக வைத்துக்கொள்கின்றன.

உப்பு நீரும் நன்னீரும் கலந்திருக்கிற இந்த நிலத்தில் வாழ்கிற தன்மைகொண்ட சுரபுன்னை, கண்டல் எனச் சில தாவரங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது தில்லை மரங்கள்.

கடலின் ஆழத்தில் பவழப்பாறைகள் இருக்கும். அதிலிருந்து உருவாகும் பாசிகளால், கடலுக்குள் இருக்கிற நீர்த்தாவரங்கள் சுவாசிக்க முடியாமல் போகும். அந்தப் பாசிகளை நண்டுகள் உண்டு விடும்.

கடற்கரை மணலில் இருக்கிற நண்டுகள் மணலில் இருக்கிற கரிமப்பொருள்களை உண்ணும். மீன்களுக்கு அடுத்தபடியாக நண்டுகளையே உலகெங்கும் பலரும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். அந்த நண்டுகள் சாப்பிடுபவை இவைதான்.

இனி, இந்தக் கட்டுரையின் ஸ்பெஷல் கெஸ்ட் தில்லை நண்டுகள் பற்றிப் பார்ப்போம்’’ எனத் தகவல்களைத் தொடர்ந்தார் கோவை சதாசிவம்.

’’தில்லை நண்டுகள், சதுப்பு நிலங்களில் வாழ்பவை. சதுப்பு நிலத்தை, சேற்று நிலம் அல்லது ஈர நிலம் என்றும் சொல்வர். ஆறுகளின் ஓட்டத்தால் மலைகளில் இருந்து வந்து சேர்கிற வண்டல் மண்ணையும், கடல் மண்ணையும் ஒன்று சேர்த்து, சதுப்பு நிலமாக மாற்றி வைத்திருக்கிறது இயற்கை.

உப்பு நீரும் நன்னீரும் கலந்திருக்கிற இந்த நிலத்தில் வாழ்கிற தன்மைகொண்ட சுரபுன்னை, கண்டல் எனச் சில தாவரங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது தில்லை மரங்கள்.

கோவை சதாசிவம்
கோவை சதாசிவம்

இந்தத் தில்லை மரத்தின் வேர்களுக்கு இடையேதான் மூன்றடி வரைக்கும் வளைகள் தோண்டி வாழும் இந்த நண்டுகள். எதற்குத் தெரியுமா? அந்த மரத்தின் வேர்களில் பால் போன்ற திரவம் கசியும்.

இதை உண்டு வாழ்வதாலேயே இந்த நண்டுக்கு இந்தப் பெயர். தில்லை மரத்தின் பால் நம் கண்களில் பட்டுவிட்டால் கண் பார்வையே போய்விடுமாம். ஆனால், அந்தப் பால்தான் சதுப்பு நில நண்டுகளுக்கு உணவாகிறது.

சரி, சதுப்பு நில தாவரங்களின் வளர்ச்சிக்கு இந்த நண்டுகள் எப்படி உதவி செய்கின்றன? மண்புழுபோல மூன்றடிக்குச் சேற்றைக் கீழ், மேலாகப் புரட்டிப்போடுவது தில்லை நண்டுகள்தான். இதனால், அந்த மரங்களின் வேர்களுக்கு ஈரப்பதமும் காற்றோட்டமும் கிடைக்கிறது.

தில்லை நண்டு
தில்லை நண்டு

தில்லை நண்டுகளை மூட்டுவலி, சளி மற்றும் காய்ச்சலுக்கு நல்லது என ரசம் வைத்து உண்பார்கள். ஆனால், இவற்றைப் பிடிப்பதற்குத் தனி திறமை வேண்டும். கூடவே, நிறைய தைரியமும் வேண்டும்.

தில்லை நண்டுகள் மூன்று அடி ஆழத்துக்கு வளைகள் தோண்டி வாழும் என்றேன் இல்லையா..? ஒவ்வொரு வளையிலும் 3 முதல் 5 நண்டுகள் வரை வாழும். இந்த வளைகளிலேயே இனப்பெருக்கமும் செய்யும். இந்த நண்டை வெறும் கையால்தான் பிடிக்க முடியும்.

மரங்களின் வேர்களுக்கிடையே குழி தோண்டி, மண்ணில் படுத்து, முழுக்கையையும் குழிக்குள் விட்டால்தான் தில்லை நண்டைப் பிடிக்க முடியும். நண்டுகள் குஞ்சுப்பொரித்த பிறகு, காலி செய்த வளைகளில் கடல் பாம்புகள் குடியேறி விடும்.

அந்த வளைகளுக்குள் அனுபவமில்லாதவர்கள் நண்டு பிடிக்க கையைவிட்டால், பாம்பு கடித்துவிடும். அப்படிப்பட்ட சம்பவங்களை நானே பார்த்திருக்கிறேன். கடிபட்ட இடத்தில் சுண்ணாம்பு தடவிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடுவார்கள்.

தில்லை நண்டுகளுக்கு இப்போது இரண்டு சிக்கல்கள் வந்திருக்கின்றன. புவி வெப்பம் உயர்ந்ததால் கடலின் இயல்பான வெப்பமும் மாறுபட்டிருக்கிறது. இதனால், கடலின் உப்புத்தன்மை அதிகரித்திருக்கிறது. இதனால், தில்லை நண்டுகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இப்போது புயல்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. புயல்களின் தீவிரமும் அதிகரித்திருக்கிறது. பருவ மழைகள் இயல்பாக இல்லாமல் புயல் மழையாக மாறத் தொடங்கிவிட்டப் பிறகு, புயல்கள் கடற்கரையையும் அதையொட்டி இருக்கிற சதுப்பு நிலங்களையும், அங்கு வாழ்கிற தில்லை நண்டுகளின் வாழ்க்கையையும் அதிகம் பாதித்துக்கொண்டிருக்கின்றன’’ என்கிறார் கோவை சதாசிவம்.

ஒளிராத மின்மினிகள் கண்டுபிடிப்பு! குரும்பர் பழங்குடிகளின் பெயரை சூட்டிய ஆய்வாளர்கள் - ஏன் தெரியுமா?

இயற்கையின் பேரதிசயம் அல்லது பெருங்கொடை என ஆய்வாளர்களால் போற்றப்படும் மேற்கு தொடர்ச்சி மலையில் மதிப்பிட முடியாத அளவில் வனவளங்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்... மேலும் பார்க்க

ஆர்ப்பரிக்கும் காவிரி! பிரமாண்டமான இரட்டை அருவிகள்!

பாராசுக்கி அருவிககனாசுக்கி அருவிககனாசுக்கி அருவிபாராசுக்கி அருவி காவிரி ஆறு ககனாசுக்கி அருவிககனாசுக்கி அருவிககனாசுக்கி அருவிககனாசுக்கி அருவிபாராசுக்கி அருவிபாராசுக்கி அருவிபாராசுக்கி அருவிககனாசுக்கி அ... மேலும் பார்க்க

கூடலூர்: குட்டியுடன் குப்பை தொட்டியில் உணவு தேடி அலையும் தாய் யானை; கேலிக்கூத்தாகும் சூழல் சுற்றுலா?

சுற்றுலாவின் பெயரால் நீலகிரியில் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க சூழல் சுற்றுலா என்கிற பெயரில் வனத்துறையால் சுற்றுலா நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உணவு தேடி அலையும் யானை கூடலூர் ... மேலும் பார்க்க