கோவை: லாட்டரி மார்ட்டின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை!
நவ. 12 முதல் மழையின் ஆட்டம் ஆரம்பம்! - பிரதீப் ஜான்
வரும் நவ. 12 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:
தமிழகத்தில் இன்று(நவ. 10) மழைக்கு வாய்ப்பில்லை. வரும் நவ. 12 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஆரம்பிக்கும் இந்த முதல்கட்ட மழை, தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தீவிரமடையும்.
வரும் நவ. 12 முதல் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க:நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும், இந்த புயல் சின்னம் மேற்கு திசையில், தமிழக - இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி நகரும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, நவ.12 ஆம் தேதி சென்னை செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.